சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் நுழைந்த கேது பகவான்! பண மழையில் நனையும் 3 ராசிகள்!
ராசிபலன் கேது பெயர்ச்சி: கேது தற்போது கன்னி ராசியில் அமர்ந்து சூரியனின் ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியனின் விண்மீன் மண்டலத்தில் கேது கிரகத்தின் பெயர்ச்சி காரணமாக, கும்பம் உட்பட இரண்டு ராசி அறிகுறிகளுக்கு நேரம் மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.
நிழல் கிரகம் ஆன கேது பகவான் நவக்கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகம் ஆகும். திடீர் மாற்றங்கள், ஆன்மீக தேடல், துறவு, மோட்சம் ஆகிய காரகத்துவத்தை உள்ளடக்கி உள்ளதால் கேது பகவான் மேட்சகாரகன் என்று அழைக்கப்படுகின்றார். கேது பகவான் தனது நட்சத்திர மண்டலத்தை மாற்றுவது 12 ராசிகளிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களை உண்டாக்கும்.
கேது பகவானின் ராசி மாற்றம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கேது தற்போது கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார். நேற்று, நவம்பர் 10ம் தேதி, இரவு 11:31 மணியளவில், கேது இந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தார்.
உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார். த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, கேது இந்த ஆண்டு இறுதி வரை சூரிய பகவானை அதிபதியாக கொண்ட உத்திரம் நட்சத்திரத்தில் இருப்பார். சூரியனின் ராசியில் கேது சஞ்சரிப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம் -
கேது சஞ்சாரத்தால் பலன் பெறும் 3 ராசிகள்!
தனுசு
சூரியன் பகவானின் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை கொண்டு வரும். உங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். சமூகத்தில் பதவி, கௌரவம் உயரும். தொழில் சம்பந்தமான விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். பணம் தொடர்பான பிரச்சனைகளும் படிப்படியாக நீங்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் பயனுள்ள நன்மைகளை உண்டாக்கும். நீண்ட நாட்களாக முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். வீட்டில் உங்கள் செல்வ நிலை பெருகும். தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலதிபர்களுக்கு புதிய வணிக வாய்ப்புகள் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் நற்பலன்கள் கிடைக்கும் காலம் இது. வழக்கு மற்றும் வாக்குவாதங்களில் வெற்றி அடைவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சொத்துக்கள் தொடர்பான பழைய முதலீடுகள் லாபங்களை ஈட்டித் தரும். உங்கள் நிதி நிலை முன்பை விட மேம்பாடு அடையும். பணி நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.