சுழன்று அடிக்கும் சுக்கிரன்! திடீர் திருமணம் யோகம் பெரும் தனுசு ராசி! சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!
தனுசு ராசிக்கு 6 மற்றும் 11ஆம் இடங்களுக்கு அதிபதியாக சுக்கிர பகவான் பெயர்ச்சி அடைந்ததால் ஏற்றங்களை தரும். வேலை மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் தீரும். உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் தீர்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
Mar 27, 2025 11:06 AMவருகிற 29-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்.. பண விஷயத்தில் மிக மிக கவனம் தேவை!
Mar 27, 2025 10:27 AMGuru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?
Mar 27, 2025 10:22 AMMoney Luck: அள்ளிக் கொடுக்க வருகின்றார் செவ்வாய்.. ஜாக்பாட்டில் சிக்கிய ராசிகள்.. வியாபார வளர்ச்சி யாருக்கு?
பரிவர்தனை யோகம்
விருச்சிகம் ராசியில் இருந்த சுக்கிர பகவான் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரையிலான 26 தனுசு ராசியில் வாசம் செய்ய உள்ளார். சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷபம் ராசியில் குரு பகவானும், குரு பகவான் அதிபதியாக உள்ள தனுசு ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்து பரிவர்தனை யோகத்தை உண்டாக்கி உள்ளனர். இந்த யோகம் ஆட்சிக்கு இணையான பலன்களை கொடுக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.
தனுசு ராசியும் சுக்கிர பகவானும்
தனுசு ராசிக்கு 6 மற்றும் 11ஆம் இடங்களுக்கு அதிபதியாக சுக்கிர பகவான் பெயர்ச்சி அடைந்ததால் ஏற்றங்களை தரும். வேலை மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் தீரும். உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் தீர்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
அழகும் வீரியமும் கூடும் காலம்
உடலில் பொலிவு கூடும், பேச்சில் தெளிவு பிறக்கும். தொழிலில் இருந்த தேக்க நிலை விலகும். பண வரவுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வங்கி கடனுக்காக காத்து இருந்தவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் புதிய வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். வீரியமுடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள்.
சமூகம் மற்றும் குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு திடீர் திருமணங்கள் ஏற்படலாம். மூதாதையர்கள் வழி சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் விலகும். நீண்ட நாட்களாக வராத பணம் திரும்ப கிடைக்கும்.
முதலீடுகளில் கவனம் தேவை
விவசாயிகள், வழக்கறிஞர்களுக்கு மாறுதல் உண்டாகும் காலம் இது. மக்கள் தொடர்பு மூலம் அனுகூலமும், லாபமும் கிடைக்கும் காலம் இது. இதுவரை பிரச்னைகளில் இருந்து வந்த நிலைகள் மாறி மகிழ்ச்சி பிறக்கும். தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். வெளியூர் பயணங்களால் வெற்றிகள் கிடைக்கும். சிலர் வீடுகளில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.
பங்குச்சந்தை முதலீடுகளில் கூடுதல் கவனம் உடன் செயல்பட வேண்டிய காலம் இது. புதிய முதலீடுகள் செய்யும் போது முறையான எச்சரிக்கையும் கவனமும் தேவை. எதிர்களால் லாபம் உண்டாகும். தொழில் கூட்டாளிகளால் வெற்றிகள் கிடைக்கும். வாழ்கை துணை உடன் நெருக்கும் அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
