தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Uthiram Nakshatram: ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Uthiram Nakshatram: ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 12, 2024 04:37 PM IST Kathiravan V
May 12, 2024 04:37 PM , IST

  • ”உத்திரம் நட்சத்திரம் ஆத்மகாரகனான சூரியனின் நட்சத்திரம் என்பதால், சூரியனின் குணநலன்கள் இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும். புகழ், கீர்த்தி, பெருந்தன்மை ஆகியவை இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும்”

சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்றான உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதம் சூரியனின் ராசியான சிம்ம ராசியிலும், 2, 3, 4 ஆவது பாதங்கள் புதனின் ராசியான கன்னி ராசியிலும் உள்ளது.

(1 / 8)

உத்திரம் நட்சத்திரம் ஆத்மகாரகனான சூரியனின் நட்சத்திரம் என்பதால்,  சூரியனின் குணநலன்கள் இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும். புகழ், கீர்த்தி, பெருந்தன்மை ஆகியவை இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.

(2 / 8)

வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்காமல் அனைவரையும் சமமாக பார்க்க கூடிய இயல்பு இவர்களுக்கு இருக்கும்.

(3 / 8)

சிக்கனவாதிகளான இவர்கள் தேவை இல்லாமல் செலவுகளை செய்யமாட்டார்கள். எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்னை கொண்ட இவர்களுக்கு ஒழுங்காக பொய் சொல்ல தெரியாது.

(4 / 8)

உத்திரம் நட்சத்திரத்தில்தான் சூரிய பகவான் பிறந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சூரிய மகா தசை வருகிறது. 

(5 / 8)

உத்திரம் நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு எருது ஆகும், உரிய விருட்சமாக அலரி மரம் உள்ளது. உரிய பறவையாக கிலுவை பட்சி உள்ளது. 

(6 / 8)

உத்திரம் நட்சத்திரத்திற்கு உரிய வசிய நட்சத்திரமாக உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளது.

(7 / 8)

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, ரோகிணி, திருவோணம், அஸ்தம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுசம், உத்திரட்டாதி, மகம், மூலம், அஸ்வினி, பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரம் வரும் நாட்களில் புதிய செயல்களை தொடங்கினால் வெற்றிகள் கிட்டும்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்