Magaram Rasipalan: சுக்கிரன், குரு, ராகு உள்ளிட்ட 4 கிரகங்களால் மகரத்திற்கு அடிக்கும் ராஜயோகம்! இனி ஏற்றம்தான்!-beneficial planets for magaram in astrology sukran budhan guru and rahu - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Rasipalan: சுக்கிரன், குரு, ராகு உள்ளிட்ட 4 கிரகங்களால் மகரத்திற்கு அடிக்கும் ராஜயோகம்! இனி ஏற்றம்தான்!

Magaram Rasipalan: சுக்கிரன், குரு, ராகு உள்ளிட்ட 4 கிரகங்களால் மகரத்திற்கு அடிக்கும் ராஜயோகம்! இனி ஏற்றம்தான்!

Kathiravan V HT Tamil
Aug 30, 2024 10:07 PM IST

இந்த காலகட்டத்தில் சுக்கிரனும், ராகுவும் உங்களுக்கு ஆதரவான நிலையில் உள்ளது புதிய மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டு வரும். கணவன், மனைவி உறவில் இருந்த பிரச்னைகள் தீரும். திருமண வாழ்கையில் உள்ள மகரம் ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Magaram Rasipalan: சுக்கிரன், குரு, ராகு உள்ளிட்ட 4 கிரகங்களால் மகரத்திற்கு அடிக்கும் ராஜயோகம்! இனி ஏற்றம்தான்!
Magaram Rasipalan: சுக்கிரன், குரு, ராகு உள்ளிட்ட 4 கிரகங்களால் மகரத்திற்கு அடிக்கும் ராஜயோகம்! இனி ஏற்றம்தான்!

மகரம் ராசிக்காரர்களுக்கு யோகம் தரும் கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார். எத்தனை துன்பங்கள், வேதனைகள், அவமானங்கள் வந்தாலும் கூட காத்து ரட்சிக்கும் கிரகமாக சுக்கிரன் உள்ளார்.

துன்பங்களில் பங்கெடுக்கும் குணம்!

பாதசனியில் உள்ள மகரம் ராசிக்காரர்கள் எத்தனை துன்பங்களை வாழ்வில் சந்தித்தாலும் கூட அதில் இருந்து மீண்டு வரும் இயற்கை சக்தி மகரம் ராசிக்காரர்களுக்கு உண்டு. தான்தான் வேலை உண்டு என்று இல்லாமல் பிறரது துன்பங்களில் பங்கு எடுக்கும் குணம் உங்களுக்கு உண்டு. 

இந்த காலகட்டத்தில் சுக்கிரனும், ராகுவும் உங்களுக்கு ஆதரவான நிலையில் உள்ளது புதிய மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டு வரும். கணவன், மனைவி உறவில் இருந்த பிரச்னைகள் தீரும். திருமண வாழ்கையில் உள்ள மகரம் ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

நன்மைகளை தரும் 3 கிரகங்கள் 

இந்த நேரத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். சனி பகவான் வக்ரம் பெற்று உள்ளார். சுக்கிரன், செவ்வாய், குரு ஆகிய மூன்று கிரகங்கள் நன்மைகளை தரும். 

வேதனை, துன்பம், துயரம் ஆகிய சிக்கல்களை சந்த்து வந்த நிலையில் குரு, செவ்வாய் இணைந்து குரு மங்கள யோகம் உண்டாகும். இதனால் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரும். 

நிம்மதி பிறக்கும் நேரம் இது!

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறியவர்கள், அவமானங்களை சந்தித்தவர்கள் வாழ்கையில் நிம்மதி பிறக்கும் நேரம் இது. சொந்த வீடு மற்றும் வாகனங்கள் அமையும் யோகம் சில மகரம் ராசிக்காரர்களுக்கு உண்டாகும். மகரம் ராசிக்காரர்களுக்கு இருந்த இடம் தொடர்பான பாதிப்புகள் படிப்படியாக தீரும். 

வாக்குவாதம் செய்வதை தவிருங்கள் 

சனிபகவான் வக்ரம் பெற்று இருப்பதால் பிறருடன் வாக்குவாதம் செய்வதையும், பிறருடைய விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதையும், உங்கள் அந்தரங்க விஷயங்களை பிறருடன் பங்கீடு செய்யாமல் இருப்பது சிறப்புகளை தரும். சுக்கிரன் மூலம் வாழ்கையில் நல்ல முன்னேற்றங்களை கொடுக்கும். 

உத்யோக உயர்வு கிடைக்கும்

குரு, சுக்கிரன், புதன், ராகு ஆகிய கிரகங்கள் நல்ல நிலையில் உள்ளதால் வருமானம் உயரும். யாரிடமும் சென்று கையேந்தாத நிலை உண்டாகும். பொருளாதார ரீதியிலான முன்னேற்றம் கிடைக்கும்.  வெளிநாடு செல்ல முயல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அரசுத்துறை மூலம் ஆதாயம் பெறுதல், அரசு வேலை கிடைப்பது, அரசு வேலையில் உள்ளவர்களுக்கு உத்யோக உயர்வு உள்ளிட்டவை உண்டாகும். 

மகரம் ராசிக்காரர்கள் எந்த நிலையிலும் மனோ தைரியத்தையும், தன்னம்பிக்கையில் இழக்க கூடாது. இறை வழிபாடு உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தும். அவ்வப்போது சிறு குழப்பங்களும், கவலைகளும் இருந்தாலும் நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!