September Horoscope: குறையும் சனியின் தாக்கம்! மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத ராசிபலன்கள்!-september zodiac predictions magaram kumbam and meenam rasis horoscopes explained - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  September Horoscope: குறையும் சனியின் தாக்கம்! மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத ராசிபலன்கள்!

September Horoscope: குறையும் சனியின் தாக்கம்! மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத ராசிபலன்கள்!

Kathiravan V HT Tamil
Aug 30, 2024 09:01 PM IST

ஏழரை சனி பகவானின் ஆதிக்கத்தில் உள்ள மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத ராசிபலன்கள் இதோ!

September Horoscope: குறையும் சனியின் தாக்கம்! மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத ராசிபலன்கள்!
September Horoscope: குறையும் சனியின் தாக்கம்! மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத ராசிபலன்கள்!

மகரம் ராசிக்காரர்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவீர்கள். உங்கள் ராசியின் ராஜ யோகாதிபதியான சுக்கிர பகவான் இந்த மாதத்தின் பிற்பகுதியில ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்திற்கு சென்று ஆட்சி பெறுகிறார். இந்த காலகட்டத்தில் வேலை தொழில் அமைப்புகள் மிகச் சிறப்பாக இருக்கும். நல்லா இருக்கும் பதவி பட்டம் கிடைக்கும் நிலை உண்டாகும். 

உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து குருபகவான் ராசியை பார்ப்பது நன்மைகளை ஏற்படுத்தி தருவதாக அமையும். குரு பார்வையால் உங்களுக்கு வரக்கூடிய பிரச்னைகள் ஏதுமின்றி நன்மைகளை தரும். மனைவி வழியில் ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பலன்கள் கிடைக்கும் நல்ல நேரமாக இது அமையும். 

ஆறாம் இடத்தில் செவ்வாய் பகவானும், ஆறாம் இடத்தில் செவ்வாய் பகவானும் இருப்பது மிகப்பெரிய யோகபலனாக இருக்கும். மூன்றாம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு இப்போது தைரிய வீரியத்தை நன்றாக தருவார். இதனால் எதையும் சமாளிக்கக்கூடிய தைரியம் உங்களுக்கு கிடைக்கும். 6ஆம் இடத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் எதிர்ப்புகளை எதிரிகளை அடக்கிக் கொடுக்கக்கூடிய தன்மை, கடன் பிரச்னைகளை தீர்க்க கூடிய தன்மையை ஏற்படுத்தி தருவார். 

கும்பம்

ஜென்ம சனியின் ஆதிக்கத்தில் இருக்க கூடிஅய் கும்ப ராசிக்காரர்களுக்கு கடுமையான பிரச்னைகளை சந்தித்து ஆக வேண்டிய நிலை உள்ளது. ஆனால் வரக்கூடிய மாதங்கள் தொல்லைகளில் இருந்து விடுபடக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து வருகின்ற மார்ச் மாதம் வரையில் ஜென்ம சனி உள்ளது. அடுத்து வரும் மூன்று மாதங்களில் படிப்படியாக பிரச்னைகள் தீரும். ஜென்மச்சனி முடியும் போது ஒரு தொழில் அமைப்புகள் ஏற்படும். வேலையை சமீபத்தில் இழந்தவர்களுக்கு நல்ல மாற்று வேலை கிடைக்கும் நிலை உண்டாகும். 

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்தில் பாதி மாதம் நன்றாக இருக்கும். மீதி பாதி மாதம் சில சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். ஆனால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படலாம். 8ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி ஆவதால் பங்குச்சந்தை உள்ளிட்ட ஊக வணிகத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். கஷ்டப்படும் மீனம் ராசிக்கார்களுக்கு முதல் 20 நாட்கள் நன்றாக இருக்கும். விரைய சனி பாதிப்பில் இருக்கும் மீனம் ராசிக்காரர்களுக்கு பணம் சேர்க்க முடியாத நிலை உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஜென்மசனி தொடங்குகின்றது என்பதால் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது அவசியம். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.