Malviya Rajayogam: துலாம் ராசிக்கு செல்லும் சுக்கிரன்! மாளவிய ராஜயோகத்தால் காதல், செல்வத்தில் திளைக்கும் 3 ராசிகள்!-astrology update 3 rasis gaining from malviya rajayoga with lord sukran in thulam - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Malviya Rajayogam: துலாம் ராசிக்கு செல்லும் சுக்கிரன்! மாளவிய ராஜயோகத்தால் காதல், செல்வத்தில் திளைக்கும் 3 ராசிகள்!

Malviya Rajayogam: துலாம் ராசிக்கு செல்லும் சுக்கிரன்! மாளவிய ராஜயோகத்தால் காதல், செல்வத்தில் திளைக்கும் 3 ராசிகள்!

Kathiravan V HT Tamil
Aug 30, 2024 09:11 PM IST

வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று, சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் காரணமாக மாளவ்ய ராஜயோகம் உருவாகும். ஜோதிடத்தில், மாளவ்ய ராஜயோகம் மிகவும் மங்களகரமான பலன்களை தரும் ஒன்றாக கருதப்படுகிறது.

Malviya Rajayogam: துலாம் ராசிக்கு செல்லும் சுக்கிரன்! மாளவிய ராஜயோகத்தால் காதல், செல்வத்தில் திளைக்கும் 3 ராசிகள்!
Malviya Rajayogam: துலாம் ராசிக்கு செல்லும் சுக்கிரன்! மாளவிய ராஜயோகத்தால் காதல், செல்வத்தில் திளைக்கும் 3 ராசிகள்!

செழிப்பை கொண்டு வரும் சுக்கிர பகவான் 

சுக்கிரனின் சுப பலன் ஒரு நபரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று, சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் காரணமாக மாளவ்ய ராஜயோகம் உருவாகும். ஜோதிடத்தில், மாளவ்ய ராஜயோகம் மிகவும் மங்களகரமான பலன்களை தரும் ஒன்றாக கருதப்படுகிறது. அதன் நல்ல பலன் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

மாளவ்ய ராஜயோகம் என்றால் என்ன?

ஜாதகத்தில் மாளவ்ய ராஜயோகம் அமைவதால் மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை ஆக உள்ளது. இது பஞ்ச மகாபுருஷ் யோகம் என்றும் அழைக்கப்படுகின்றது. சுக்கிரன் மூலம் உருவாகும் இந்த யோகம் ஆனது சரியாக வேலை செய்தால் ஒருவரது வாழ்க்கையில் பணத்துக்கு பஞ்சம் இருக்காது. ஆன்மிகச் செயல்களில் ஆர்வம் அதிகரித்து வாழ்க்கை சுகபோகங்க செயல்களில் கழியும்.

துலாம்

மாளவ்ய ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு உறக்கம் சுகமாகும். இந்த யோகத்தின் சுப பலன்களால் உங்கள் அனைத்து வேலைகளும் வெற்றியடையும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும். வியாபாரத்தில் அமோக லாபம் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பொருள் சேர்க்கை கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும். 

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு புதிய வருமானம் உண்டாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பழைய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் தொழிலில் பெரிய வெற்றியை அடைவீர்கள். நிதி ரீதியாக செழிப்பாக இருக்கும். ஆளுமை மேம்படும். 

மீனம்

சுக்கிரன் தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பது மீன ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதம். இந்த காலகட்டத்தில், உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நீங்கள் நிறைய முன்னேற்றம் அடையலாம். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. காதல் உறவுகளில் இனிமை இருக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க பல பொன்னான வாய்ப்புகள் அமையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.