Lust in Astrology: ’காம உணர்ச்சி அதிகம் கொண்ட ராசிகள் இவர்கள்தான்!’ உங்கள் ராசி காம ராசியா? இதோ விவரம்!
”ஜோதிடத்தை பொறுத்தவரை மூன்று ராசிகள் அதிக காமம் கொண்ட ராசிகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இது லக்னத்திற்கும் பொருந்தும்”

காமம் என்ற சொல்லுக்கு விருப்பம் என்று பொருள்! இது ஆண் அல்லது பெண் மோகம் மட்டும் இல்லாமல் பிற விஷயங்களிலும் எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பவர்களாக கருதப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
Mar 27, 2025 11:06 AMவருகிற 29-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்.. பண விஷயத்தில் மிக மிக கவனம் தேவை!
Mar 27, 2025 10:27 AMGuru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?
Mar 27, 2025 10:22 AMMoney Luck: அள்ளிக் கொடுக்க வருகின்றார் செவ்வாய்.. ஜாக்பாட்டில் சிக்கிய ராசிகள்.. வியாபார வளர்ச்சி யாருக்கு?
ஜோதிடத்தை பொறுத்தவரை மூன்று ராசிகள் அதிக காமம் கொண்ட ராசிகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இது லக்னத்திற்கும் பொருந்தும்.
ராசிகளை பொறுத்தவரை தர்ம ராசிகள், கர்ம ராசிகள், காம ராசிகள், மோட்ச ராசிகள் என 4 வகைகளாக 12 ராசிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. இவை அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய தத்துவத்தை அடிப்படையாக கொண்டு பிர்க்க்கப்பட்டுள்ளது.
தர்ம ராசிகள்
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் தர்ம ராசிகளாக கருதப்படுகிறது. இவர்களுக்கு தர்ம சிந்தனை இருக்கும். இல்லாதவர்களுக்கு உதவுதல், கஷ்டப்படும் உறவுகளுக்கு உதவுதல் உள்ளிட்ட குணங்கள் இவர்களுக்கு புகழை பெற்றுத்தரும்.
கர்ம ராசிகள்
கர்மம் என்ற சொல்லுக்கு வேலை என்று பொருள். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகள் கர்ம ராசிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு இட்ட வேலைகளில் கண்ணும், கருத்துமாக இருக்கும் சிந்தனை கொண்டவர்கள், தங்கள் செயல்பாடுகளில் அதிக கவனம் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் மேற்கொள்ளும் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் அதிக செல்வத்தை சேர்க்கும் நிலை இவர்களுக்கு உண்டாகும்.
காம ராசிகள்
மிதுனம், துலாம், கும்ப ராசிகள் காம ராசிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு காம குணங்கள் அதிகமாக இருக்கும். இங்கு காம குணங்கள் என்பது ஆண் மற்றும் பெண் சார்ந்த மோகம் என்று மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. நன்றாக உடை அணிதல், நல்ல உணவுகளை ருசித்தல், ஊர் சுற்றுதல், மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்தல் உள்ளிட்ட உடலுக்கும், மனதிற்கும் சுகம் தரும் செயல்பாடுகளில் இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். இன்பத்தை அனுபவிக்க பிறந்தவர்களாக இவர்களது செயல்பாடுகள் இருக்கும்.
மோட்ச ராசிகள்
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் மோட்ச ராசிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு தியானம், கடவுள் பக்தி உள்ளிட்டவைகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும். இவர்களுக்கு எந்த சோதனை நடந்தாலும் பாரத்தை கடவுள் மீது போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.
இதில் கர்ம ராசிகளான தங்களது பணிகளில் கவனம் செலுத்தி அதிக செல்வத்தை சேர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பர்.
காமம்
காமம் என்பது உயிரினங்களின் தொடர்ச்சிக்கு இன்றியமையாத செயல்முறையாக விளங்குகிறது. காமத்தால் பெறும் இன்பம் உடல் மற்றும் மன ரீதியான மகிழ்ச்சியை வழங்குகிறது. இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைப்பதுடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் இதே காமம் அளவுக்கு மீறி செல்லும் நிலையில் உடல்ரீதியிலும், மனரீதியிலும் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி கடும் பாதிப்பை கொண்டு வரும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்