Astrological Benefits: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்ட யோகங்கள் தரும் 4ஆம் இட ரகசியங்கள்!-astrological benefits of 4th houses mother luck fame and wealth - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astrological Benefits: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்ட யோகங்கள் தரும் 4ஆம் இட ரகசியங்கள்!

Astrological Benefits: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்ட யோகங்கள் தரும் 4ஆம் இட ரகசியங்கள்!

Kathiravan V HT Tamil
Sep 11, 2024 03:11 PM IST

இந்த இடத்திற்கு பொறுப்பேற்கும் கிரகங்கள் ஆன சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியோர் உள்ளனர். சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியோர் 4 ஆம் இடத்தில் திக்பலம் பெறுவதால் கூடுதல் சிறப்புகளை தரும்.

Astrological Benefits: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்ட யோகங்கள் தரும் 4ஆம் இட ரகசியங்கள்!
Astrological Benefits: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்ட யோகங்கள் தரும் 4ஆம் இட ரகசியங்கள்!

சூரியன்

சூரியன் 4ஆம் இடத்தில் இருப்பது அவ்வளவு சிறப்பை தரும் என்று சொல்ல முடியாது. தாய் வழி உறவுகளுடன் பகை ஏற்படலாம். ஜாதகருக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம். 4ஆம் இடம் என்பது மார்பு பகுதியை குறிக்கும் என்பதால் ஜாதகருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். ஆளுமை நிறைந்த தாயார் ஜாதகரை கட்டுப்படுத்துவார்கள். 

சந்திரன்

சந்திரன் 4ஆம் இடத்தில் இருப்பது சொத்து, சுகம் ஆகியவற்றை கொடுக்கும். தாயார் உடனான உறவு சிறக்கும். தாய் வழி உறவுகள் உடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும். வண்டி, வாகனம் மற்றும் கால்நடை சேர்க்கை இருக்கும், விவசாயம் மூலம் லாபம் உண்டாகும். சந்திரன் திக்பலம் பெறுவதால் மிகுந்த நன்மைகளை ஜாதகர் பெறுவார். 

செவ்வாய்

செவ்வாய் பகவான் 4ஆம் இடத்தில் இருப்பது பூமி மூலம் செல்வம் சேர்க்கை ஏற்பட வழி வகை ஏற்படும். ஆனாலும் தாய் மற்றும் தாய் வழி உறவுகள் உடன் பகை ஏற்படலாம். சொத்துக்களுக்காக வம்பு, வழக்கு, நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலைகள் ஏற்படலாம். இருந்தாலும் இறுதி வெற்றி உங்களுக்கே இடைக்கும். நோய், கடன், எதிரிகள் உருவாகி கொண்டே இருப்பார்கள். ஜாதகருக்கு சற்று அடாவடித் தனம் இருக்கும். 

புதன்

புதன் பகவான் 4ஆம் இடத்தில் இருப்பது உகந்த பலன்களை தரும். தாய் உடன் இணக்கமான உறவுகள் ஏற்படும். சாமர்த்தியம் மற்றும் புத்திசாலித்தனமாக ஜாதகர் செயல்படுவார். கற்காத மேதைகள் உருவாவார்கள். சூழலுக்கு ஏற்றார் போல் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவீர்கள். வசதி வாய்ப்புகள் நிறைவாக கிடைக்கும். சுற்றத்தார் வியக்கும் வகையில் வாழ்கையை வாழ்வீர்கள். 

சுக்கிரன்

சுக்கிர பகவான் 4ஆம் இடம் என்பது கலவையான பலன்களை தரும். சுக்கிரன் 4ஆம் இடத்தில் திக்பலம் பெற்று வசதி, சொத்துக்கள், வீடு, வாகனம், தாய் வழியில் மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். ஆனாலும் மாறுபாடு அடையும் சிந்தனை ஜாதகருக்கு இருக்கும். ஆடம்பர பொருட்கள் மீது ஜாதகருக்கு அதிக ஆசை இருக்கும். சுக்கிரன் தனித்து இருந்தால் பெரிய சிக்கல்கள் ஏதும் இருக்காது. ஆனால் பாவிகள் உடன் சேர்க்கை பெற்று இருக்கும் போது சிக்கல்கள் வரலாம். ஜாதகர் எல்லா சுகங்களையும் அனுபவிக்க பிறந்தவராக ஜாதகர் இருப்பார். 

குரு 

குரு பகவான் 4ஆம் இடத்தில் இருப்பது சிறப்புகளை தரும். ஜாதகர் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவார். திட்டமிட்டு செயல்படும் இவர்களுக்கு சிக்கனத் தன்மை இருக்கும். 

சனி 

சனி பகவான் 4ஆம் இடத்தில் இருப்பது அவ்வளவு சிறப்புகளை தருவது இல்லை. கல்வியில் தடை, வாகன விபத்து, எப்போதும் பயம், எதிர்மறை சிந்தனைகள், தாய் உடன் பிரச்னை உள்ளிட்டவைகள் ஏற்படும். 

ராகு

ராகு பகவான் 4ஆம் இடத்தில் இருந்தால் கற்பு, ஒழுக்க நிலைகளில் பிரச்னைகள் வரலாம். இயற்கை சுபர்களின் இணைவு, பார்வை, தொடர்புகள் இருந்தால் இந்த பலன்கள் மாறும். வெளிநாடு பயணங்கள் மீது தீராத ஆசை இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கற்பார்கள். இவர்களின் நடவடிக்கைகள் தாயாரை வருத்தப்பட செய்யும். 

கேது

கேது பகவான் 4ஆம் இடத்தில் இருப்பது மோசமான பலன்களை தரும். வீடு, உத்யோகம் நிலையில்லாமல் இருக்கும். எதிலும் பற்று அற்ற நிலையில் ஜாதகர் இருப்பார். இவர்களின் செயல்பாடுகளை தாயாரை வருத்தம் அடைய செய்யும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner