பரிகாரம் செய்தும் பலன் இல்லையா.. எப்படி பரிகாரம் செய்தால் நன்மை.. மாந்தி என்பவர் யார்.. விளக்குகிறார் ஜோதிடர் அசோகா
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பரிகாரம் செய்தும் பலன் இல்லையா.. எப்படி பரிகாரம் செய்தால் நன்மை.. மாந்தி என்பவர் யார்.. விளக்குகிறார் ஜோதிடர் அசோகா

பரிகாரம் செய்தும் பலன் இல்லையா.. எப்படி பரிகாரம் செய்தால் நன்மை.. மாந்தி என்பவர் யார்.. விளக்குகிறார் ஜோதிடர் அசோகா

Marimuthu M HT Tamil
Nov 18, 2024 01:49 PM IST

பரிகாரம் செய்தும் பலன் இல்லையா.. எப்படி பரிகாரம் செய்தால் நன்மை.. மாந்தி என்பவர் யார்.. விளக்குகிறார் ஜோதிடர் அசோகா; அது பற்றிப் பார்க்கலாம்.

பரிகாரம் செய்தும் பலன் இல்லையா.. எப்படி பரிகாரம் செய்தால் நன்மை.. மாந்தி என்பவர் யார்.. விளக்குகிறார் ஜோதிடர் அசோகா
பரிகாரம் செய்தும் பலன் இல்லையா.. எப்படி பரிகாரம் செய்தால் நன்மை.. மாந்தி என்பவர் யார்.. விளக்குகிறார் ஜோதிடர் அசோகா

இதுபற்றி அஸ்ட்ரோ அசோகா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறுவதாவது, ‘’ இப்போது பரிகாரம் செய்பவர்கள் எல்லாம் நான் நல்லாயிருக்கணும் பரிகாரம் செய்றாங்களே ஒழிய, அவர்கள் நல்லாயிருக்கணும் என்று பரிகாரம் செய்யவில்லை. இதற்குப் பெயர் சுயநலப் பரிகாரம். இந்த அடிப்படையில் எந்த பரிகாரம் செய்தாலும் நமக்கு நன்மை நடக்காது. பரிகாரம் என்பதை விட தானம், தர்மம் என்கிற நோக்கத்தில் பண்ணுங்க, அதுதான் மிகச்சிறந்த பரிகாரம்.

உங்கள் கண்முன் பள்ளி செல்லும் ஒரு குழந்தையின் துணி கிழிந்து இருக்கிறது என்றால், ஒரு துணி வாங்கிக் கொடுங்கள். இது வஸ்திர தானம். அந்த மாணவனுக்கு செருப்பு இல்லையா, செருப்பு தானம் கொடுங்கள்.

சனி பகவானுக்குரிய சிறந்த பரிகாரம்:

கடும்குளிரில் பாலத்துக்குக் கீழ் ஆதரவற்றோர் தூங்கிக்கொண்டிருந்தால் ஒரு போர்வை வாங்கிக் கொடுங்க. மிகச்சிறந்த சனி பகவானுக்குரிய பரிகாரம். சனி பகவானால் தொழில் தடை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் தாமதம் இருந்தால் ஒரு 150 ரூபாய் பெட்ஷீட் மிகச்சிறந்த பரிகாரம்.

அமாவாசைக்கு அன்னதானம் செய்வது பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருப்பார்கள். அப்போது கோயில் பக்கத்தில் இருக்கும் யாசகர்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்திட்டு வந்திடுவாங்க.

அன்றைய நாளில் நிறைய யாசகருக்கு முன் ஏராளமான உணவுப் பொட்டலங்கள் இருக்கும். அவர்களுக்கு உணவு தானம் செய்வது பற்றி சொல்லியிருப்பாங்க. ஆனால், சரியான நபர்களுக்குப் போய் சேர்ந்ததா என்றால் இல்லை. அவர்களிடம் இருக்கும் பெரும்பான்மையான பொட்டலங்கள் குப்பைக்குத் தான் போச்சு.

அன்னதானம் இப்படி கொடுங்க:

குப்பைக்குப் போகும் உணவுக்கு எப்படி பலன் கிடைக்கும். அவர்களுக்கு நல்லது நடக்காது. அதே ஊரில் இரண்டு கி.மீ தூரத்தில் ஒரு முதியோர் இல்லம் இருக்கும். யாரும் அங்கு போகமாட்டார்கள். அங்கு தான் உணவுதானம் செய்யணும்.

உங்களுக்கு கேதுவினால் காரியத்தடைகள் நிகழ்ந்திருந்தால், மன நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உதவி பண்ணுங்க. முதியோர் இல்லத்திலிருக்கும் வயதானவங்களுக்கு 10 நைட்டி வாங்கிக் கொடுங்கள். பத்து டவல் வாங்கிக் கொடுங்க. பத்து லுங்கி வாங்க் கொடுங்கள். குளிக்கிறதுக்கு சோப்பு வாங்கிக் கொடுங்கள். அழுக்கு என்பது சனி பகவான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனைப்போக்கினால் தான் நன்மை.

இன்னொருத்தவங்களுக்கு உதவி செய்தால் தான், நம் கர்மா கழியும். யாருக்கும் உதவாமல் நம் கர்மா கழியாது.

மாந்தி என்பவர் யார்?:

சனியின் மகன் மாந்தியினாலும் சிலருக்குத் தடைகள் இருக்கும். இவர் சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவாக்கப்பட்டவர். ராவணன் பத்தில் சில கிரகங்களையும் பதினொன்றில் சில கிரகங்களையும் நிற்கவைத்து, இந்திரஜித்தை பிறக்க வைக்கணும் என்று நினைத்தார். இது அதர்மமான செயல். அதர்மத்தை என்றைக்கும் தட்டிக்கேட்பவர் தான் சனி பகவான். அவர் பதினொன்றில் நின்றுகொண்டு, பன்னிரெண்டில் தனது வலது காலைத் தூக்கி வைக்கப்போனார்.

இதை உணர்ந்த ராவணன் சனி பகவானின் காலை தனது வாளால் வெட்டிவிட்டார். அதைக் காட்சியாக நினைத்துப் பார்த்தால் வெட்டுபட்ட கால், லக்னத்தில் விழுந்தது. என்னுடைய அனுமானம் ராவணன் பக்கவாட்டில், சனியின் காலை வெட்டியிருப்பார். அதனால் தான், கால் லக்னத்தில்போய் விழுந்திருக்கிறது.

ஜாதக கட்டம் தான் சதுரமே ஒழிய, கிரகங்கள் நிற்பது நீள்வட்டம் தான். லக்னத்தில் மாந்தி இருப்பதன் காரணமாக, இந்திரஜித்தின் ஆயுள் போயிடுச்சு.

இதில் இருந்து நமக்கு என்ன புரியுது. நாம் கடவுளாக முயற்சி செய்யக்கூடாது. சொல்லும் பரிகாரத்தை இறைவனை நினைத்து சரணாகதி அடைந்திடணும்.

சனி என்பதால் தாமதம் என்று பெயர். நீங்கள் இன்று நினைப்பதை லேட்டாக செயல்படுத்துவீர்கள். இன்னிக்கு நீங்கள் ஆசைப்பட்டால் தாமதமாகத் தான் ஒரு வருடம் கிடைத்துதான் கிடைக்கும்.

லக்னத்தில் மாந்தி இருந்து அதை சனி பார்த்தால் இன்னும் தீயவிளைவுகளை ஏற்படுத்தும். நம் தமிழ் ஜாதகத்தில் மாந்திக்குக் கொடுக்கும் முக்கியத்தும் குறைவு.

மாந்திக்கு காலண்டரில் நேரம் இருக்காது. ஆனால், அதில் டிராவல் செய்வார். மாந்திக்குண்டான நேரத்தை ஜோதிடர்கள் மூலம் அறிந்து அதற்கேற்ப நடப்பது நல்லது’’ என ஜோதிடர் அஸ்ட்ரோ அசோகா பேசிமுடித்தார்.

நன்றி: அஸ்ட்ரோ அசோகா

Whats_app_banner