மனநலம்பாதித்த கணவர் – மாந்திரீகம் செய்து குணப்படுத்த முயன்று மாட்டிக்கொண்ட பெண்
மனநலம் பாதிக்கப்பட்ட கணவரை மாந்திரீகம் செய்து குணப்படுத்துவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனிமாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் புகார்மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ள விவரம் -
எனதுகணவர் 2003ம் ஆண்டு முதல் மனநலம்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தேனி மாவட்டம் தேவதானப் ட்டி ஆசாரி தெருவைசேர்ந்த சந்திரசேகரன் அவருடைய மனைவி விஜி ஆகியோர் எனது மாமியாரிடம் அறிமுகம்ஆனார்கள். அவர்கள் எனது கணவருக்கு நேரம்சரியில்லை என்றும், தேவதானப்பட்டியில் உள்ள கோயில் மற்றும் எங்களதுவீட்டில் வைத்து பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் எனது மாமியாரிடம் கூறினர்.
பரிகாரம்செய்வதற்கு பூஜை மற்றும் மலையாளகுருஜி பூஜை போன்றவை செய்தால்உடல்நிலை மற்றும் மனநிலை சரியாகிவிடும் என்றார்கள். அதை நம்பிய எங்களிடம் 2003ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான கால கட்டங்களில் ஜோதிட பரிகாரம், மாந்திரீக பூஜைகளுக்கு பணம் வேண்டும் என்றுகேட்டனர்.