’தங்கமா? நிலமா? பணம் கொட்ட…!’ மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகள் செய்ய வேண்டிய முதலீடுகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’தங்கமா? நிலமா? பணம் கொட்ட…!’ மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகள் செய்ய வேண்டிய முதலீடுகள்!

’தங்கமா? நிலமா? பணம் கொட்ட…!’ மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகள் செய்ய வேண்டிய முதலீடுகள்!

Kathiravan V HT Tamil
Published Oct 15, 2024 08:29 PM IST

ஜோதிடத்தில் 4ஆம் இடம் என்பது முதலீடுகளை குறிக்க கூடிய இடமாக உள்ளது. ஒவ்வொரு லக்னத்திற்கும் 4ஆம் வீட்டின் அதிபதியை கொண்டே முதலீடு சார்ந்த வெற்றிகள் தீர்மானிக்கப்படுகின்றன.

’தங்கமா? நிலமா? பணம் கொட்ட…!’ மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகள் செய்ய வேண்டிய முதலீடுகள்!
’தங்கமா? நிலமா? பணம் கொட்ட…!’ மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகள் செய்ய வேண்டிய முதலீடுகள்!

இது போன்ற போட்டோக்கள்

மேஷம் முதல் கன்னி லக்னங்கள் வரையிலான முதலீட்டு பலன்கள்

மேஷம் 

மேஷம் லக்னத்திற்கு 4ஆம் இடமாக சந்திரனின் கடக வீடு உள்ளது. சர வீட்டின் அதிபதியான சந்திரன் ஸ்திர வீட்டில் உச்சம் பெறக்கூடியவர். இதனால் பூமி சார்ந்த முதலீடுகள் நல்ல பலன்களை தரும். 4ஆம் இடத்தில் பாவிகள் இருப்பது, சந்திரன் நீசம், செவ்வாய் பலமிழந்து இருப்பது மட்டுமே நிலம் சார்ந்த முதலீடுகளில் பிரச்னைகள் வரலாம். இது தவிர்த்த எந்த நிலையிலும் பூமி சார்ந்த முதலீடுகள் வெற்றிகளை தரும். இது மட்டுமின்றி பைனான்ஸ், அடகு வியாபாரம், தண்டல், சில்லறை வணிகம் உள்ளிட்ட முதலீடுகள் நல்ல பலன்களை தரும். 

ரிஷபம்

ரிஷப லக்னத்திற்கு 4ஆம் இடம் ஆனது சூரியன் வீடு ஆகும். பூர்வீக சொத்துக்களை வாங்கி அனுபவிப்பது என்பது நல்ல முதலீடாக இருக்கும். சூரியன் 4 க்கு உடையவராக இருந்து, 12ஆம் இடத்தில் உச்சம் பெறுவதால் கல்வி சார்ந்த முதலீடுகள், அரசு சார்ந்த முதலீடுகள், அரசாங்க கடன் பத்திரங்கள், தங்க பத்திரங்களில் முதலீடு செய்வது நன்மைகளை தரும். பங்காளிகள் மற்றும் மாமனார் வழியில் வரும் சொத்துக்களை வாங்குவது அல்லது முதலீடு செய்வது நல்ல பலன்களை தரும். 

மிதுனம் 

மிதுனம் லக்னத்திற்கு 4ஆம் இட அதிபதியாக புதன் வருவதா அறிவு சார் துறைகளில் முதலீடு செய்வது பலன்களை தரும். கல்வி, கல்வி நிறுவனங்கள், ஆடிட்டிங் மற்றும் ஒப்பந்தம்,  சார்ந்த முதலீடுகள் உயர்வை ஏற்படுத்தும். அதே சமயம் கடன் வங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். 

கடகம்

கடகம் லக்னத்திற்கு 4ஆம் அதிபதியாக சுக்கிரன் உள்ளார். ஹோட்டல்கள், அழகு சாதன பொருட்கள், தங்க ஆபரணம், சினிமா, மீடியா சார்ந்த பங்கு முதலீடுகள் நல்ல பலன்களை தரும். திருமண மண்டபங்கள், ரியல் எஸ்டேட் முதலீடுகள் நல்ல உயர்வை பெற்றுத் தரும். பெண்ணுக்கு திருமணம் நடப்பதற்கு தேவையான பொருட்கள் சார்ந்த முதலீடுகள் நல்ல பணவரவை கொண்டு வரும். 

சிம்மம்

சிம்மம் லக்னத்திற்கு 4ஆம் வீட்டு அதிபதியாக செவ்வாய் பகவான் உள்ளார். சகோதரர்கள் பூமியை வாங்குவது மிகப்பெரிய பிரச்னைகளை தரும். ஒவ்வொரு முதலீடுகளுக்கு பிறகும் சில சங்கடங்களை சந்திக்கலாம். இதனால் செவ்வாய் தொடர்பு உடைய நிலம், மனை, கட்டுமானம் சார்ந்த முதலீடுகள் நல்ல பலன்களை தரும். மேலும் பாதுகாப்பு துறை சார்ந்த பங்குகள், கட்டுமானம் சார்ந்த பங்குகள் நல்ல பலன்களை தரும். 

கன்னி 

கன்னி லக்னத்திற்கு 4ஆம் வீட்டு அதிபதியாக குரு பகவான் உள்ளார். கல்வி நிறுவனம் சார்ந்த முதலீடுகள் நல்ல பலன் தரும். தங்கத்தில் செய்யும் முதலீடுகள் பிரச்னைகளை தரலாம். வாழ்கை துணை உயர்வுக்கு முதலீடு செய்வது நன்மை தரும். வங்கி, தபால்நிலைய சேமிப்பு சார்ந்த முதலீடுகள் சிறப்பை தரும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.