Buthan Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Buthan Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!

Buthan Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!

Kathiravan V HT Tamil
May 28, 2024 06:00 AM IST

Buthan Neesam in Astrology: புதன் பகவானின் நீசம் என்பது அவருடைய காரகத்துவத்தை, ஆதிபத்தித்தை குறைவாக தரும் அமைப்பாகவே இருக்கும். புதன் நீசம் அடைந்தாலும் தனி மனித வாழ்கைக்கு தேவையான வெற்றிகளை நிச்சயமாக தரும் தன்மை கொண்டவர் புதன்.

Buthan Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!
Buthan Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!

நீசம் அடைதல் என்றால் என்ன?

ஜோதிடத்தை பொருத்தவரை ஒரு கிரகம் நீசம் அடையும் போது, நீசம், நீச பங்கம், நீச பங்க ராஜயோகம் ஏற்பட்டு உள்ளதா என்ற மூன்று வகையான பார்வைகளை கொண்டு ஜோதிடர் அலசுகின்றனர். நீசம் என்பது ஒரு பலவீனமான அமைப்பு ஆகும். ஸ்தான பலத்தின் இறுதிநிலையாக நீசம் என்பது சொல்லப்படுகிறது. 

ஸ்தான பலம் பெற்று உள்ள ஒரு கிரகம் ஆனது ஆட்சி, உச்சம், நட்பு, பகை, மூலத்திரிகோணம், சமம், நீசம் ஆகிய செயல்பாடுகளை கொண்டு இருக்கிறது. இதில் உச்சம் என்பது ஒளி நிறைந்த நிலையாகவும், நீசம் என்பது ஒளி இழந்த நிலையாகவும் உள்ளது. 

புதனின் ஆட்சி, உச்சம், நீசம் 

நீசம் பெற்ற கிரகம் தன்னுடைய ஆதிபத்திய, காரகத்துவங்களை தராது என்பதுதான் ஜோதிட விதியாக உள்ளது. புதன் பகவான் புத்திக்கு காரகமான கிரகம் ஆகும். மிதுனம், கன்னி ராசிகளை தனது சொந்த வீடுகளாக கொண்ட இவர், மீனம் ராசியில் நீசம் அடைகிறார். கன்னி ராசியில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் அடைகிறார். 

கிரகங்களில் மிகவும் வலிமை குறைந்த கிரகமாக புதன் கருதப்படுகிறது. சேரும் கிரகத்தின் பலனை அதிகம் பிரதிபலிக்கும் கிரகமாக புதன் உள்ளது. 

புதன் நீசம் அடைந்தாலும், தனது உச்சவீட்டை தனது பார்வை பலத்தால் வலிமைப்படுத்திவிடுவார் என்பதால் படிக்காத மேதைகளை உருவாக்கிவிடுவார். 

புதன் பகவானின் நீசம் என்பது அவருடைய காரகத்துவத்தை, ஆதிபத்தியத்தை குறைவாக தரும் அமைப்பாகவே இருக்கும். புதன் நீசம் அடைந்தாலும் தனி மனித  வாழ்கைக்கு தேவையான வெற்றிகளை நிச்சயமாக தரும் தன்மை கொண்டவர் புதன். புத்தி, வித்தை, அடிப்படை கல்வி, எழுதுதல், இயங்குதல், இயக்குதல் போன்றவற்றை செய்யும் கிரகமாக புதன் உள்ளார். 

12 லக்னத்திற்கும்ப புதன் நீசம் ஆனால் ஏற்படும் பலன்கள் 

மேஷம்

மறைமுக கடன், மறைமுக எதிரிகள், மறைமுக நோய்களை கொடுப்பார், ஆனால் கெட்டவன் கெடுவான் என்ற விதியின்படிப்படையில் ஓரளவு நற்பலன்கள் கிடைக்கும். 

ரிஷபம்

மனதில் கவலைகள் வாட்டும், சம்பாதிப்பதில் இடைஞ்சல் இருக்கும். சேமிக்க முடியாத சூழல் இருக்கும், கௌரவம், புகழ், அந்தஸ்திற்கு பாதிப்பு ஏற்படும், கல்வியை முடிக்க தடை ஏற்படும்.

மிதுனம்

தொழில் வலிமை குன்றும், புதன் சார்ந்த தொழில்களில் நஷ்டம் உண்டாகும், பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்படும். வண்டி, வாகனம், வீடு மூலம் சிக்கல் உண்டாகும். 

கடகம்

புதன் நீசம் ஆவது கடக லக்னத்திற்கு நன்மையை ஏற்படுத்தும், நண்பர்களால் இழப்பு உண்டாகும், சகோதரர்கள் ஏமாற்றுவார்கள். பூர்வீக சொத்துக்களை அனுபவிக்க முடியாது. 

சிம்மம்

சிம்ம லக்னத்திற்கு புதன் நீசம் ஆக கூடாது. நீசம் ஆனால் பணம் சம்பாதிப்பதில் சிக்கல், சொன்ன வாக்கை காப்பாற்ற இயலாமை உண்டாகும். 

கன்னி

வாழ்கை துணை, நண்பர்கள், உறவுகளால் ஏமாற்றம் உண்டாகும். அடிமை ஜீவனம் ஏற்படலாம்.

துலாம்

பாக்கிய விரயம் ஏற்படும். அதிர்ஷ்ட குறைபாடு ஏற்படும். தந்தை உடன் பிரச்னை உண்டாகலாம். 

விருச்சிகம்

திடீர் விபத்து, கண்டங்கள், சூழ்ச்சி வலையில் சிக்குவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். 

தனுசு

சுகம் கெடும், வாழ்கை துணை விஷயத்தில் முரண்பாடு, உத்யோக வாய்ப்பில் சிக்கல் உண்டாகும். 

மகரம் 

கடன் இல்லை, நோய் இல்லை, எதிரி இல்லை, துணிச்சல் இல்லை, நல்ல நண்பன் இல்லை, சகோதர உறவு இல்லாத நிலையை தரும். தகப்பன் உடன் பகை ஏற்படலாம். 

கும்பம் 

ஆண் வாரிசுகள் இல்லாமை, விபத்து கண்டங்களை ஏற்படுவது, மைத்துனரால் மன வருத்தம்  ஏற்படலாம். 

மீனம் 

வாழ்கை துணை நோய்வாய் படுவது, கூட்டளிகளால் இழப்பு, கல்வியில் தடை உள்ளிட்டவைகள் ஏற்படலாம். 

பொறுப்புத் துறப்பு:-

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner