நீங்க அதிர்ஷ்டசாலி தான்.. இந்த இடத்தில் மச்சம் இருக்கா? சொத்து மேல சொத்து வாங்குவீர்கள்.. தொட்டது துலங்கும்!
Macha Palangal : ஆண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருந்தால் அது நல்ல பலன்களை தேடி தருவதற்கான அறிகுறி என்று அர்த்தமாம். அதேபோல பெண்களுக்கு வலது புறத்தை காட்டிலும் இடது புறத்தில் அதிக மச்சம் இருப்பின் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயமாக சாதிப்பார்கள் பணம் சம்பாதிப்பார்கள் என மச்ச சாஸ்திரம் கூறுகிறது.

நம் உடலில் இருக்கக்கூடிய மச்சங்களும் அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்களும் என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம். குறிப்பாக இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி என மச்ச சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 19, 2025 06:01 PMகேது பெயர்ச்சி: பணக்கார இடத்தை பிடிக்கப் போகும் ராசிகள் இவர்கள்தானா?.. கடின உழைப்பு தேவை.. கவலைப்படாத ராசிகள்
Mar 19, 2025 05:53 PMருச்சக யோகம்: பணமழை கொட்டும்.. விருச்சக ராசியில் நுழையும் செவ்வாய்.. செல்வ ராசிகள் பட்டியலில் நீங்கள் உண்டா?
Mar 19, 2025 01:34 PMஒரே நாளில் சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம்.. இந்த 3 ராசிக்கு பாதிப்பு.. உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள்!
Mar 19, 2025 11:37 AMஅதிர்ஷ்ட ராசிகள் : நான்கு கிரகங்களின் சேர்க்கை.. மூன்று ராசிக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகுது.. அந்தஸ்து, கௌரவம் உயரும்!
Mar 19, 2025 10:04 AMபிசாசு யோகம்: தரித்திர யோகத்தில் மாட்டிக் கொண்ட ராசிகள்.. ராகு சனி உருவாக்கிய பிசாசு யோகம்.. எது உங்க ராசி?
Mar 19, 2025 09:25 AMகேது பெயர்ச்சி 2025 : சிம்ம ராசியில் பிரவேசிக்கும் கேது.. எந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் .. பண மழை நனையும் யோகம் உங்களுக்கா
அது எந்தெந்த இடங்கள் ஆண்களுக்கு எப்படி இருக்கிறது? பெண்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை குறித்து இதில் பார்க்கலாம்.
ஆண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருந்தால் அது நல்ல பலன்களை தேடி தருவதற்கான அறிகுறி என்று அர்த்தமாம். அதேபோல பெண்களுக்கு வலது புறத்தை காட்டிலும் இடது புறத்தில் அதிக மச்சம் இருப்பின் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயமாக சாதிப்பார்கள் பணம் சம்பாதிப்பார்கள் என மச்ச சாஸ்திரம் கூறுகிறது.
வம்சம் விருத்தியாகும்
பெண்களுக்கு தொப்புளில் இடது புறத்தில் மச்சம் இருந்தால் வம்சம் விருத்தியாகும். அந்தக் குழந்தையின் மூலம் பணம் பெருகும் சொத்துக்கள் குவியும். தாய் மூலமாக தானாகம் ஏற்படும். அதேபோல வலது புறத்தில் தொப்புளில் மச்சம் இருந்தால் ஆண்களுக்கு வாழையடி வாழையாக சொத்து சேர்க்கும் யோகம் கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாம்.
தலைமை பொறுப்பை ஏற்று நடத்தக்கூடிய வல்லமை
ஆண்களுக்கு வலது புருவத்தின் மேல் மச்சம் இருந்தால் அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்க போகிறார்கள் என்று அர்த்தமாம். அது அரசியலாக இருந்தாலும் சரி அல்லது பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, குடும்பத்திலும் சரி இவர்கள் தலைமை பொறுப்பை ஏற்று நடக்கக்கூடிய நபராக இருப்பார். அதேபோல பெண்களுக்கு இடது புருவத்தின் மேல் மச்சம் இருந்தால் அவர்களும் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தக்கூடிய வல்லமை பெற்றவராக இருப்பார் என்று அர்த்தமாம்.
ஜனங்களை வசியப்படுத்தும் அமைப்பு
ஆண்களுக்கு உதட்டின் மேல் வலது புறத்திலும் பெண்களுக்கு உதட்டின் மேல் இடது புறத்திலும் மச்சம் இருந்தால் அவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள், நல்ல பலன்கள் அவர்களை தேடி வரும், அதிர்ஷ்டம் ஏற்படும்,கோடீஸ்வரர் ஆவது உறுதி. ஜன வசியம் என சொல்லப்படக்கூடிய ஜனங்களை வசியப்படுத்தும் அமைப்பு இவர்களுக்கு அதிகம் உண்டு.
சொத்து வாங்கி குவிப்பார்கள்
அடுத்து ஆண்களுக்கு வலது கன்னத்தில் குறிப்பாக கண்களுக்கு கீழே உள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் பார்க்கும் இடமெல்லாம் சொத்து வாங்கி குவிப்பார்கள். அதேபோல பெண்களுக்கு இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சொத்துக்கள் குவிக்க போகிறார்கள் என்று அர்த்தமாம்.
தொட்டது துலங்கும்
ஆண்களுக்கு வலது கையில் ஆள்காட்டி விரல் கீழ் மச்சம் இருந்தால் அவர்கள் தொட்டது துலங்கும். செல்வ செழிப்போடு இருப்பார்கள். வைரம் வைருடியம் வாங்கும் யோகம் ஏற்படும். தங்கத்தை சேர்த்து வைக்கக்கூடிய குபேரனாக நீங்கள் திகழ்வீர்கள். அதேபோல பெண்களுக்கு இடது கையில் ஆள்காட்டி விரல் கீழ் மச்சம் இருந்தால் செல்வ செழிப்போடு திகழ்வீர்கள். லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்ததாக இருக்கும் நீங்கள் தீர்க்க கரசியாக திகழ்வீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்