Singappenne: கருணாகரன் கன்னத்தில் விழுந்த பளார் அறை.. அன்புவிடம் புலம்பும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்-singappenne serial today episode on september 12 2024 indicates karunakaran got slap from magesh - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne: கருணாகரன் கன்னத்தில் விழுந்த பளார் அறை.. அன்புவிடம் புலம்பும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்

Singappenne: கருணாகரன் கன்னத்தில் விழுந்த பளார் அறை.. அன்புவிடம் புலம்பும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்

Aarthi Balaji HT Tamil
Sep 12, 2024 08:03 AM IST

Singappenne: மித்ரா, மகேஷின் அப்பாவிடம் நீங்கள் ஆனந்தியை மகேஷ் காதலிக்கிறான் என்று சொன்ன போதே தடுத்திருக்க வேண்டும் என்று சொல்லி எப்போது போல் ஏத்திவிட்டார்.

Singappenne: கருணாகரன் கன்னத்தில் விழுந்த பளார் அறை.. அன்புவிடம் புலம்பும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்
Singappenne: கருணாகரன் கன்னத்தில் விழுந்த பளார் அறை.. அன்புவிடம் புலம்பும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்

கருணாகரன், ஆனந்தி செல்போனை அடித்து உடைத்த நிலையில் அதை மகேஷ் தட்டிக் கேட்கிறார். அதற்கு கருணாகரன், “ இந்த போன் போனால் என்ன, வேறு எவனாவது வாங்கி கொடுப்பான் “ என்றார். இதனால் கடும் கோபம் அடைந்தார் மகேஷ். கருணாகரன் கன்னத்தில் விழுந்தது பளார் அறை.

மித்ரா வேலை

இன்னொரு பக்கம் மித்ரா, மகேஷின் அப்பாவிடம் நீங்கள் ஆனந்தியை மகேஷ் காதலிக்கிறான் என்று சொன்ன போதே தடுத்திருக்க வேண்டும் என்று சொல்லி எப்போது போல் ஏத்திவிட்டார். ஆனந்தி மட்டும் இல்ல அன்பும் இதற்கு காரணம் என்று மகேஷின் நண்பனும் சொல்லிவிட்டார். 

ஆனந்தி, அன்புவிடம், “ தங்களின் சொந்த நிலத்தை சுயம்பு லிங்கம் மற்றும் பெரிய முக்கன் ஏமாற்றி வாங்கி விட்டார்கள் “ என்று கண்ணீர் சிந்தியப் படி கதறினார்.

மகேஷ் தட்டிக் கேட்டதை கருணாகரனால் சற்றும் ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால், “ உங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று எனக்கு எந்த அவசியமும் இல்லை “ என கோபமாக சொல்ல, கன்னத்தில் விழுந்தது பளார் அறை. அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிவுக்கு வந்தது. மேலும் என்ன நடக்கும் என்பதை இரவு 9 மணிக்கு சன் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

நேற்றைய எபிசோட்

சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய ( செப் . 11 ) எபிசோட்டில் இருந்து, குடோனுக்கு ஆனந்தியை அன்பு அழைத்து இருந்த நிலையில், அவள் அழகன் யார் என்று சொல்லப் போகிறீர்களா அன்பு, என்று கேட்டாள். இதையடுத்து அன்பு அழகன் யார் என்பதை உன்னிடம் காண்பிக்கவே போகிறேன் என்று கூறினான். அவன் அதைப் பற்றி பேசும் பொழுதே, கருணாகரன் அங்கிருந்து அவனை அழைக்க, இருவரும் பதறினார்கள்.

அடமான நிலம்

இன்னொரு பக்கம் மித்ரா, மகேஷின் அப்பாவிடம் நீங்கள் ஆனந்தியை மகேஷ் காதலிக்கிறான் என்று சொன்ன போதே தடுத்திருக்க வேண்டும் என்று சொல்லி சூழ்ச்சி செய்கிறாள். இதற்கிடையே கோகிலா ஆனந்திக்கு போன் செய்து, சொக்கலிங்கம் அடமான நிலத்தை விற்க சூழ்ச்சி செய்யும் விஷயத்தை கூற முயற்சி செய்த போதே, கருணாகரன் ஆனந்தியின் போனை பிடுங்கி உடைத்து விட்டான்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.