Macha Palangal: பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் உங்களுக்கு என்ன நடக்கும்.. கட்டிலில் சாகசம் தான்.. யார் அதிர்ஷ்டசாலி?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Macha Palangal: பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் உங்களுக்கு என்ன நடக்கும்.. கட்டிலில் சாகசம் தான்.. யார் அதிர்ஷ்டசாலி?

Macha Palangal: பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் உங்களுக்கு என்ன நடக்கும்.. கட்டிலில் சாகசம் தான்.. யார் அதிர்ஷ்டசாலி?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 18, 2024 02:57 PM IST

Macha Palangal: உடலில் குறிப்பிட்ட சில இடங்களில் இருக்கக்கூடிய மச்சம் ஒரு சில யோகத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. எந்தெந்த இடங்களில் இருக்கக்கூடிய மச்சங்கள் கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் என இங்கு காண்போம்.

பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் உங்களுக்கு என்ன நடக்கும்.. கட்டிலில் சாகசம் தான்.. யார் அதிர்ஷ்டசாலி?
பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் உங்களுக்கு என்ன நடக்கும்.. கட்டிலில் சாகசம் தான்.. யார் அதிர்ஷ்டசாலி?

இது போன்ற போட்டோக்கள்

நெற்றி

உங்களுக்கு நெற்றியில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது மச்சத்தின் நிலைப்பாடு பொறுத்து பல அர்த்தங்கள் மாறுபடுகின்றன உங்கள் நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அது ஞானத்தை குறிக்கின்றது. நெற்றியின் இடது பக்கத்தில் உங்களுக்கு மச்சம் இருந்தால் அது மோசமான பலன்களை கொடுக்க கூடும் என கூறப்படுகிறது வலது பக்கத்தில் இருந்தால் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை துணை கிடைப்பார்கள் என கூறப்படுகிறது.

உதடுகள்

உதட்டில் மச்சம் இருந்தால் நீங்கள் அதிக லட்சியம் கொண்டவர்களாக இருப்பீர்கள் எனக் கூறப்படுகிறது உதட்டின் மூலையில் மச்சம் இருந்தால் நீங்கள் அதிக உணவு விரும்பிகளாக இருப்பீர்கள். உங்கள் கீழ் உதட்டிற்கு கீழே மச்சம் இருந்தால் உங்களுக்கு கலைத்துறையில் அதிக ஆர்வம் உள்ளது என அர்த்தமாம்.

கன்னம்

கன்னத்தில் உங்களுக்கு மச்சம் இருந்தால் நீங்கள் அதிகம் பாசம் மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பீர்கள் என கூறப்படுகிறது கன்னத்தில் இருக்கக்கூடிய மச்சம் உங்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கையை கொடுக்கக்கூடும். மேலும் புதிய இடத்திற்கு நீங்கள் சென்றால் அந்த இடத்தில் இருப்பவர்களை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வீர்கள் எனக் கூறப்படுகிறது கன்னத்தின் வலது புறத்தில் இருக்கக்கூடிய மச்சம் உங்களை ராஜா ஆளுமைக்கு கொண்டு செல்லும் எனக் கூறப்படுகிறது. இடதுபுரத்தில் இருந்தால் அது உங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும் என கருதப்படுகிறது.

மூக்கு

மூக்கின் மேலே உங்களுக்கு மச்சம் இருந்தால் உங்களுக்கு அதிக சுயமரியாதை இருக்கும் என கூறப்படுகிறது. மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் நீங்கள் அதிக கோபம் கொண்டவர்களாக இருப்பீர்கள் எனக் கூறப்படுகிறது. மூக்கின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் நீங்கள் அதிக உணர்ச்சிவசப்படுவீர்கள் என கருதப்படுகிறது. மூக்கின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் நீங்கள் போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் என கூறப்படுகிறது.

கைகள்

கைகளில் மச்சம் இருந்தால் நீங்கள் கடினம் உழைப்பை எப்போதும் கொடுத்துக் கொண்டிருப்பீர்கள் என கூறப்படுகிறது எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள் என்பது அர்த்தமாம் வெற்றிகரமான வாழ்க்கைக்கு கடின உழைப்பு அவசியமாகும் அதனால் கையில் மச்சம் இருப்பவர்களுக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.

கால்

காலில் உங்களுக்கு மச்சம் இருந்தால் அதிகம் பயணம் செய்வீர்கள் எனக் கூறப்படுகிறது. எப்போதும் நல்ல செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து இருப்பீர்கள் என கூறப்படுகிறது வலது காலில் உங்களுக்கு மச்சம் இருந்தால் நீங்கள் நல்ல குடும்ப வாழ்க்கையை நடத்துவீர்கள் எனவும் இடது காலில் மச்சம் இருந்தால் நீங்கள் நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்களில் இருப்பீர்கள் எனவும் கூறப்படுகிறது.

பிறப்புறுப்பு

பிறப்புறுப்பு மேல் உங்களுக்கு மச்சம் இருந்தால் நீங்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்களாகவும், நேர்மை சிகாமணியாகவும் இருப்பீர்கள் என கூறப்படுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் சிறந்த மற்றும் சிறந்த நிதி நிலைமை திருமண வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி கொண்ட நபர்களாக நீங்கள் இருப்பீர்கள் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner