Sun In Virgo: கன்னியில் தாவிய சூரிய பகவான்.. அடிமீது அடிவிழுந்து அயற்சியைப் பெறப்போகும் 3 ராசிகள்-3 zodiac signs that will suffer due to sun in virgo - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sun In Virgo: கன்னியில் தாவிய சூரிய பகவான்.. அடிமீது அடிவிழுந்து அயற்சியைப் பெறப்போகும் 3 ராசிகள்

Sun In Virgo: கன்னியில் தாவிய சூரிய பகவான்.. அடிமீது அடிவிழுந்து அயற்சியைப் பெறப்போகும் 3 ராசிகள்

Marimuthu M HT Tamil
Sep 12, 2024 09:15 PM IST

Sun In Virgo: கன்னியில் தாவிய சூரிய பகவான்,அடிமீது அடிவிழுந்து அயற்சியைப் பெறப்போகும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.

Sun In Virgo: கன்னியில் தாவிய சூரிய பகவான்.. அடிமீது அடிவிழுந்து அயற்சியைப் பெறப்போகும் 3 ராசிகள்
Sun In Virgo: கன்னியில் தாவிய சூரிய பகவான்.. அடிமீது அடிவிழுந்து அயற்சியைப் பெறப்போகும் 3 ராசிகள்

சூரிய பகவானின் பெயர்ச்சி, ஆற்றல் வெளிப்பாடு, 12 ராசிகளிலும் தாக்கத்தை உண்டு செய்கின்றன.

சூரிய பகவான் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி, கன்னி ராசிக்கு பிற்பகல் 7:29 மணிக்குப் பெயர்ச்சியாகிறது.

கன்னி ராசியில் மாறும் சூரிய பகவானின் தாக்கத்தால் சில ராசியினர் மோசமான கெடு பலன்களைப் பெறலாம். அத்தகைய ராசிகள் குறித்துக் காண்போம். 

கன்னி ராசியில் சூரிய பகவானின் தாக்கத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:

ரிஷபம்:

கன்னி ராசிக்கு மாறும் சூரியனின் பெயர்ச்சி, ரிஷப ராசியினருக்கு வணிகத்தில் மந்தத்தன்மையை உண்டாக்கும். கடுமையாக கஷ்டப்பட்டு நிதியை சம்பாதித்தாலும், விரயச்செலவுகளால் வந்த நிதி அப்படியே செலவாகும். இது பலருக்கு மனவுளைச்சலைத் தரலாம். அயல்நாட்டில் பிசினஸ் செய்யும் நபர்கள், கூடுதல் சிரத்தையுடன் உங்களது பொருட்களை அனுப்பவேண்டும். இல்லாவிட்டால், நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. பல பொருட்கள் ரிட்டர்ன் ஆகக் கூட வாய்ப்புள்ளது. இது தேவையற்ற மன உளைச்சலைத் தரலாம். எனவே, காலம் எச்சரிப்பதால் முடிந்தளவு ஏற்றுமதியைத் தவிர்க்கலாம். ஒருவேளை ஏற்றுமதியைத் தவிர்க்க முடியாது என்றால் நம்பிக்கையான பணியாளர்களைக் கொண்டு ஒரு முறைக்கு, இருமுறை ஏற்றுமதியாகும் பொருட்களைப் பரிசோதிப்பதை உறுதிசெய்யவும். இல்லற வாழ்க்கையில் அமைதியைக் கடைப்பிடிக்காவிட்டால் கணவன் - மனைவி இடையே பிரச்னைகள் வலுக்கலாம்.

விருச்சிகம்: 

கன்னி ராசியில் சூரிய பகவானின் சஞ்சாரம், சில ராசியினருக்கு துன்பத்தைத் தரும் என்று ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் உறவினர்கள் இடையே பிரச்னை வரலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் விருச்சிக ராசியினரின் மனக்கவலை கூடும். தனிப்பட்ட வாழ்க்கையும், புறச்சூழ்நிலையும் உங்களது மனநிலையைப் பிடிவாதத்தை மாற்றும் பாடங்களைக் கற்றுத்தரலாம். உங்களது முயற்சிகள் எல்லாம் வீணாகும். தேவையற்ற அலைச்சலைச் சந்திப்பீர்கள். உடல் மற்றும் மனநிலையை சரிசெய்துகொள்வது நல்லது. அதற்காக யோகா மற்றும் சுவாசப்பயிற்சியை மேற்கொள்ளலாம். இல்லையேல், தேவையற்ற பலவீனமான சிந்தனைகள் வந்து உங்களை இன்னும் பலவீனப்படுத்தும்.

கும்பம்: 

கன்னி ராசியில்பெயரும் சூரிய பகவானின் பெயர்ச்சி, கும்ப ராசியினருக்கு எச்சரிக்கையினையும் துரதிர்ஷ்டத்தையும் தருகிறது. இந்த காலத்தில் கும்ப ராசியினருக்கு தங்கள் இல்வாழ்க்கைத்துணையுடன் மனக்கசப்புடன் பயணிப்பீர்கள். சுற்றம் நட்பின் அனுசரணையும் ஆதரவும் குறையும். சூரியனின் சஞ்சாரத்தால், உங்கள் பணி சீரழியும். நினைத்த முடிவுகள் கிடைக்காது. ஒவ்வொரு பணிகளிலும் தடைகள் உண்டாகலாம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்