Astrological Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் தரும் 12ஆம் இடம் சொல்லும் ரகசியங்கள்!-12th house in astrology gains and losses of strength - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astrological Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் தரும் 12ஆம் இடம் சொல்லும் ரகசியங்கள்!

Astrological Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் தரும் 12ஆம் இடம் சொல்லும் ரகசியங்கள்!

Kathiravan V HT Tamil
Aug 31, 2024 06:30 AM IST

ஒருவருக்கு 12ஆம் இடம் பலம் பெற்றால் நல்ல நிம்மதியான தூக்கம் வரும். 12 இடம் கெட்டுப்போனால் நிம்மதியான தூக்கம் வராது. வெளிநாடு சென்று படிக்கவும், அங்கேயே செட்டில் ஆகவும், வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கவும் 12ஆம் இடம் வலுத்து இருப்பது அவசியம்.

Astrological Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் தரும் 12ஆம் இடம் சொல்லும் ரகசியங்கள்!
Astrological Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் தரும் 12ஆம் இடம் சொல்லும் ரகசியங்கள்!

விமல யோகம் தரும் 12ஆம் இடம்

தந்தையின் சொத்துக்கள், நீங்கள் தொடங்கும் தொழில், உங்கள் குழந்தைகளின் ஆயுள் ஸ்தானம், உங்க மனைவி வழியில் வரும் இரண்டாவது சொத்துக்கள், உங்கள் வருமானத்தில் கிடைக்கும் லாபம், உங்கள் இளைய சகோதரன் அல்லது இளைய சகோதரி செய்யக் கூடிய தொழில், வீடு கட்டும் யோகம் ஆகியவற்றை குறிக்கின்றது. உங்கள் ஜாதகத்தில் 12ஆம் இடத்திற்கு உரிய அதிபதி ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருந்தால் விமல யோகம் உண்டாகும். 

வெளிநாட்டில் செட்டிலாக 12ஆம் இடம் முக்கியம்

உணவு, ஆடைகள், வாகனங்கள், வீடு உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சியை குறிக்கும். கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த ஒருவரது ஜாதகத்தில் 12 ஆம் இடம் வலுப்பெற்று இருப்பது அவசியம். வெளிநாட்டிற்கு சென்று வாழ ஒருவரது ஜாதகத்தில் 12ஆம் இடம் வலுப்பெற்று இருப்பது அவசியம் ஆகும். 12ஆம் இடம் வலுப்பெற்றவர்களுக்கு இடம்பெயர்வு அடைவதன் மூலம் புகழ், வளர்ச்சி கிடைக்கும். 

அதிர்ஷ்டத்தை குறிக்கும் 12ஆம் இடம் 

ஒருவரது ஜாதகத்தில் 8ஆம் இடமும், 12ஆம் இடமும் திடீர் அதிர்ஷ்டத்தை குறிக்கின்றது. ஒருவர் அழியாத புகழுடன் வாழ 12ஆம் இடம் வலுப்பெற்று இருப்பது அவசியம். ஒருவரது ஜாதகத்தில் 12ஆம் இடம் கெட்டு போய் இருந்தால் பணம், குழந்தை, வீடு, சொத்து, தொழில், கௌரவம் உள்ளிட்ட எல்லாவற்றையும் இழந்து மீண்டும் கிடைக்கும் நிலை உண்டாகும். 

நிம்மதியாக தூங்க 12ஆம் இடம் முக்கியம் 

ஒருவருக்கு 12ஆம் இடம் பலம் பெற்றால் நல்ல நிம்மதியான தூக்கம் வரும். 12 இடம் கெட்டுப்போனால் நிம்மதியான தூக்கம் வராது. வெளிநாடு சென்று படிக்கவும், அங்கேயே செட்டில் ஆகவும், வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கவும் 12ஆம் இடம் வலுத்து இருப்பது அவசியம்.  ஒருவருக்கு 12 ஆம் இடம் கெட்டுப்போய் இருந்தால்,  சான்றிதழ், வங்கி, நிலம் சார்ந்த விஷயங்களில் தடைகளும், பிரச்னைகளும் இருக்கும். 12ஆம் இடம் கெட்டுப்போனவர்களுக்கு இடது கை பழக்கம் இருக்கும். யுத்தம் செய்து ஜெயிக்க வேண்டும் எனில் ஜாதகத்தில் 12ஆம் இடம் வலுப்பெற்று இருப்பது மிக அவசியம் ஆகும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.