Viral Video: ஆக்ராவில் சுற்றுலா பயணியை துரத்தி துரத்தி தாக்கிய கும்பல்! 5 பேர் கைது - வைரல் விடியோ
- டெல்லியிலிருந்து சுற்றுலா பயணி ஒருவர் தாஜ் மஹாலுக்கு வருகை புரிந்த நிலையில், அவர் மீது கும்பல் ஒன்று உருட்டை கட்டை, இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்திய அதிரிச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், உத்தர பிரதேச போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் தாஜ் மஹாலை பார்ப்பதற்காக ஆக்ராவுக்கு வருகை புரிந்துள்ளார். இதில் அவர் வந்த கார் மத ஊர்வலம் சென்றவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன சுற்றுலா பயணி, தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்து சிலர், ஆத்திரமடைந்து அந்த சுற்றுலா பயணி மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஊர்வலகாரர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அருகில் இருந்து இனிப்பு கடை உள்ளே புகுந்துள்ளார் சுற்றுலா பயணி. இருப்பினும் அவரை விடாது துரத்தி பிடித்து கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. சுற்றுலா பயணி தாக்குதலுக்கு உள்ளான காட்சிகள் அந்த கடையில் இருந்து சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், டுவிட்டர் வாசிகள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தரபிரதேசம் போலீசார் தெரிவித்துள்ளனர்.