தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kovilpatti: கோவில்பட்டியில் மீன் வியாபாரி உட்பட 2 பேர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை!

Kovilpatti: கோவில்பட்டியில் மீன் வியாபாரி உட்பட 2 பேர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை!

Jun 07, 2024 11:50 AM IST Karthikeyan S
Jun 07, 2024 11:50 AM IST
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் வெள்ளத்துரை (50), இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன்கடை நடத்தி வந்துள்ளார். வழக்கமாக இரவில் மீன் கடையில் வெள்ளத்துரை தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வழக்கம் போல வெள்ளத்துரை கடையில் தூங்கிய நிலையில் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி என்பவரையும் வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு உடல்களும் உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது . இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், விளாத்திகுளம் காவல்துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More