Rajasthan: கோகமேடி கொலை செய்யப்பட்ட விவகாரம்! ராஜஸ்தானில் ரயிலை மறித்து ஸ்ரீராஷ்ட்ரிய கர்னி சேனா போராட்டம்
- ஸ்ரீராஷ்ட்ரிய கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் பற்றி எரியும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 5ஆம் தேதி, கோகமேடி அவரது வீட்டில் வைத்து ஆயுதம் ஏந்திய நபர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து போராட்டம் வெடித்த நிலையில், கர்னி சேனா ஆதரவாளர்கள் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அத்துடன் ரயில் மறியல், தலைநகர் ஜெய்பபூரில் சாலை மறியல், பல்வேறு பகுதிகளில் டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை விவகாரத்தில் ஆட்சியில் இருந்து வரும் கெல்லாட் தலைமையிலான ஆட்சியை பாஜக சாடியுள்ளது. கொலை செய்யப்பட்ட கோகமேடி உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும் அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக கொல்லப்பட்டுள்ளதாக பாஜக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. இதற்கிடையே கோகமேடி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தனிப்படை அமைத்த ராஜஸ்தான் போலீஸ், கொலையாளிகளை கண்டறிந்துள்ளனர். முன்னதாக முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஆஜ்மீர் போன்ற போன்ற முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. ராஜஸ்தானின் பில்வாரா பகுதியில் ரயில் ஒன்றை மறித்து நிறுத்தியுள்ளனர். ஜெய்ப்பூர் இருக்கும் ஆக்ரா சாலையில் போராட்டகாரர்கள் கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநிலமே போராட்ட களமாக மாறியிருக்கும் நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் படை களமிறக்கப்பட்டுள்ளது.