காதல் திருமணத்தை பிரிக்க போராடிய குடும்பத்தார்.. நடுரோட்டில் காதலை காப்பாற்றிய தம்பதி!
- காரைக்குடியில் காவல் நிலையம் முன்பு காதல் தம்பதி மற்றும் பெற்றோரின் பாசப்போராட்டம். காதல் தம்பதியை பிரிக்க முயன்ற குடும்பத்தினர் சாலை யில் ஒருவரை ஒருவர் இறுகப்பற்றிய காதலர்கள் காவல் துறையினர் தலையிட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர் காரைக்குடி அருகே கோட்டையூரை சேர்ந்த அழகுபாண்டியன் கோயம்புத்தூரில் வேலைக்கு சென்ற போது அங்கு லலிதா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டதாக, இருவரும் காரைக்குடி வந்தபோது இரு தரப்பு பெற்றோரும் தகவல் அறிந்து ஜோடியிடம் கெஞ்சி கூத்தாடிய நிலையில் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றதால் சாலையில் மறித்து பிரிக்க முயன்றனர் தற்போது காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.