தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Srivilliputhur Andal Temple: The 16th Annual Annual Celebration Was Well Held

Srivilliputhur Andal Temple: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வருடாபிஷேகம்.. காணக்கிடைக்காத காட்சிகள்!

Feb 08, 2024 12:31 PM IST Stalin Navaneethakrishnan
Feb 08, 2024 12:31 PM IST
  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கடந்த 2016ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளில் ஆண்டு தோறும் வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருடாபிஷேக விழா மஹாசாந்தி ஹோமத்துடன் தொடங்கியது. திருமுக்குளத்தில் இருந்து கோயில் யானை மூலம் புனித நீர் எடுத்து வரப்பட்டு, ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 108 புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு 108 கலசாபிஷேகம், விஷேச திருமஞ்சனம் , திருவாராதனம் சாத்துமுறை, தீர்த்தகோஷ்டி நடைபெற்றது. ஆண்டாள் ரெங்க மன்னாருக்கு லட்சார்ச்சனை உடன் வருடாபிஷேக விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமரஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் முத்துராஜா செய்து வருகின்றனர்
More