Qatar Shocks India: இந்திய கப்பல் படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்த கத்தார் நீதிமன்றம்
- கத்தார் நாட்டு நீதிமன்றம் எட்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் தொடர்பான வழக்கில், கத்தாரின் முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையின் தீர்ப்பால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் கடற்படை அதிகாரிகள் மற்றும் சட்ட குழுவுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து விதமான சட்ட வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்காக உளவு வேலை பார்த்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டப்படு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கப்பல் படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகளாக உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கைதின்போது அவர்கள் அல் தஹ்ரா நிறுவனத்துக்காக பணியாற்றி வந்துள்ளனர். கத்தார் நாட்டின் மேம்பட்ட நீர்மூழ்கி கப்பல்களை இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கின் ரகசிய தன்மை காரணமா தற்போதை மேற்கொண்டு தகவல்கள் எதுவும் பகிரப்படவில்லைஎன இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.