தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Savukku Shankar: ‘கோவை சிறையில் தான் எனக்கு சமாதி’ சிகிச்சைக்கு வந்த சவுக்கு சங்கர் ஆவேச முழக்கம்!

Savukku Shankar: ‘கோவை சிறையில் தான் எனக்கு சமாதி’ சிகிச்சைக்கு வந்த சவுக்கு சங்கர் ஆவேச முழக்கம்!

May 13, 2024 12:29 PM IST Stalin Navaneethakrishnan
May 13, 2024 12:29 PM IST
  • Savukku Shankar: கோவை சிறையில் தாக்குதலுக்கு ஆளான பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர், மேல் சிகிச்சைக்காக இன்று கோவை அரசு மருத்துவமனை அழைத்து வரப்பட்டார். ஏற்கனவே அவரது கைக்கு மாவுக் கட்டு போடப்பட்டிருந்த நிலையில், இன்று அதை பிரித்து வேறு கட்டு போடுவதற்காக அழைத்து வரப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது சிகிச்சை முடித்து வெளியே வந்த சவுக்கு சங்கர், ‘சிறை அதிகாரி செந்தில் குமார் தான் , தன்னை தாக்கியதாகவும், சிறையில் தான் எனக்கு சமாதி என்று அவர் மிரட்டியதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டி கோஷமிட்டார். அவரை போலீசார் தடுக்க முயற்சித்த நிலையிலும், அவர் தன்னுடைய கருத்தை ஆவேசமாக தெரிவித்தார். அதன் பின் அவரை சர்க்கரை நோயாளிகள் பிரிவுக்கு அழைத்துச் செல்லும் போது, அப்போதும் அதே கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தார்.  
More