Tamil News  /  Video Gallery  /  Pm Modi To Get Nobel Prize? Norwegian Committee Clarifies Amid Tv Reports

பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு போலியான தகவல் - கமிட்டி விளக்கம்

18 March 2023, 12:03 IST Muthu Vinayagam Kosalairaman
18 March 2023, 12:03 IST
  • PM Modi Noble Prize: அமைத்திக்கான நோபல் பரிசு வழங்கப்பட இருக்கும் பரிந்துரை பட்டியலில் பிரதமர் மோடி பெயர் இடம்பெற்று இருப்பதாகவும், அவருக்கு நோபல் பரிசு வழங்க அந்த கமிட்டி முடிவு செய்திருப்பதாவும் உலா வரும் தகவல்கள் போலியானவை என்று நார்வே நோபல் கமிட்டி இணை தலைவர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த அவர், தனது பெயரில் பகிரப்பட்டு வரும் டுவிட் செய்தி போலியானவை என்று கூறினார். முன்னதாக இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஊடகங்கள் பிரதமர் மோடி நோபல் பரிசுக்கான முக்கிய போட்டியாளராக இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருப்பதோடு, மோடி குறித்து தான் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார் அஸ்லே டோஜே. டிவி சேனல்கலில் இதுகுறித்த தகவல்கள் ஒளிபரப்பான அடுத்த சில மணி நேரங்களில், அஸ்லே டோஜே பதிவிட்டிருப்பதாக டுவிட் பதிவும் ஒன்றும் வைரலானது. அத்துடன், நோபால் கமிட்டியின் துணை தலைவராக தான் இந்தியாவில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்
More