தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Pm Modi's Security Breached In Karnataka; Man Runs Towards Pm's Convoy In Davanagere

PM Modi: பிரதமர் மோடி கான்வே நோக்கி ஓடிய நபர்! கர்நாடகாவில் பரபரப்பு

Mar 26, 2023 03:02 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 26, 2023 03:02 PM IST

கார்நாடக மாநிலம் தாவணகெரே திறந்த காரில் பொதுமக்களை பார்த்து கையசைத்து வந்த பிரதமர் மோடியின் சாலை பேரணியின்போது பாதுகாப்பு வளையத்தை அத்துமீறி ஒருவர் தாண்டியுள்ளார். அந்த நபர் தடுப்புகளை தாண்டி பிரதமர் கான்வே நோக்கி ஓடிய நிலையில், உடனடியாக அதை கவனித்து சுதாரித்து கொண்ட போலீஸார் மற்றும் பிரதமரின் பாதுகாவலர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுதொடர்பான விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடியின் சாலை பேரணியில் எந்த பாதுகாப்பு மீறலும் ஏற்படவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே பிரதமர் மோடி வந்த எஸ்யூவி காரை நோக்கிய ஓடிய அந்த நபர் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. கர்நாடகாவில் இதுபோன்று பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்தை மீறியிருப்பது முதல்முறையல்ல. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஹப்பளியில் நடைபெற்ற சாலை பேரணியின்போது சிறுவன் கையில் பூமாலை ஏந்தியவாறு பிரதமர் கையசைத்தவாறு வந்த காரை நோக்கி ஓடி வந்துள்ளார். அப்போது போலீசார் மற்றும் பிரதமரின் பாதுகாவலர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த மூன்று மாதத்தில் இதேபோன்று மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. விரைவில் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக உள்பட இதர கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. தற்போது கர்நாடகாவில் ஆட்சியில் இருந்து வரும் பாஜக பதவிக்காலம் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

More