தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pakistan: பாகிஸ்தான் விமான படை தளத்தில் தீவிரவாத தாக்குதல்! 3 பேர் உயிரிழப்பு

Pakistan: பாகிஸ்தான் விமான படை தளத்தில் தீவிரவாத தாக்குதல்! 3 பேர் உயிரிழப்பு

Nov 04, 2023 11:39 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 04, 2023 11:39 PM IST
  • வடக்கு பாகிஸ்தானின் மியான்வாலியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு தலிபான்களுடன் தொடர்புடைய தெஹ்ரீக்-இ-ஜிஹாத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாத தாக்குதலால் பாகிஸ்தான் விமானப்படை தளம் நிலைகுலைந்து போயுள்ளது. இதில் ஏராளமான போர் விமானங்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடைபெற்ற பகுதியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலோசிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் இந்த தாக்குதல் பாகிஸ்தான் விமான தளத்தில் நடந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் பாகிஸ்தானை சேர்ந்த 386 பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளில் தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்டிருக்கும் அதிக உயிரழப்பாக இது உள்ளது. 2023ஆம் ஆண்டில் சுமார் 190 பயங்கரவாத மற்றும் எதிர் தாக்குதலால் 445 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது
More