தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Over 100 Dead After Blasts Near Qasem Soleimani's Grave In Iran

Iran Blasts: ஈரானில் இரட்டை குண்டு வெடிப்பு: 103 பேர் பலி; 150 போ் படுகாயம்!

Jan 03, 2024 09:48 PM IST Karthikeyan S
Jan 03, 2024 09:48 PM IST
  • ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள கொ்மன் மாகாணத்தில் இன்று (டிச.03) நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 103 போ் உயிரிழந்துள்ளனா். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனா். ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைவராக இருந்த ஜெனரல் காசிம் சுலைமானியின் கல்லறை அமைந்துள்ள உள்ள சாலையில் இந்த குண்டுவெடிப்பகள் நடைபெற்றுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் சுலைமானின் 4ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில் அவரது கல்லறை அருகே அடுத்தடுத்து இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சுமாா் 1 நிமிட இடைவேளியில் குண்டுகள் வெடித்து சிதறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் உறுதியான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஈரானின் முக்கிய ஜெனரலுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் வெடிகுண்டு வெடித்ததில் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தது அந்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
More