Vedachandur: ‘நிலாவாக மாறிய சிறுமி’ திண்டுக்கல் அருகே வினோத வழிபாடு!-nila puja at vedasandur kotur village of dindigul district - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vedachandur: ‘நிலாவாக மாறிய சிறுமி’ திண்டுக்கல் அருகே வினோத வழிபாடு!

Vedachandur: ‘நிலாவாக மாறிய சிறுமி’ திண்டுக்கல் அருகே வினோத வழிபாடு!

Jan 26, 2024 09:48 PM IST Stalin Navaneethakrishnan
Jan 26, 2024 09:48 PM IST

  • திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கோட்டூர் கிராமம் உள்ளது. இங்கு பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது. இதில், கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று அங்குள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த வினோத வழிபாட்டை கோட்டூர் கிராம மக்கள் நடத்தி வருகின்றனர். இது போன்று செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஊரில் விவசாயம் செழிப்படைவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். இதோ அந்த வீடியோ:

More