Indian Navy : கைவரிசை காட்டிய கடற்கொள்ளையர்கள்! களத்தில் குதித்தி இந்திய கப்பல் படை!
- மீண்டும் சோமாலிய கடற்கொள்ளையர்களின் முயற்சியை இந்திய கடற்படை முறியடித்துள்ளது. இந்திய கடற்படை வீரர்கள், 17 பணியாளர்களுடன் சிக்கிய படகை மீட்டனர். ஈரானைச் சேர்ந்த மீன்பிடி படகை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து கைப்பற்றினர். இதையறிந்த இந்திய கடற்படையினர் வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களை விடுவித்தனர். கொச்சி கடற்கரையில் இருந்து சுமார் 1300 கி.மீ தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.