Prithivi Shaw Video: செஃல்பியால் அடிதடி! சர்ச்சையில் சிக்கிய ப்ருவி ஷா
மும்பையில் உள்ள தெரு ஒன்றில் ரசிகர் ஒருவரை தாக்கியதாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ப்ருத்வி ஷா சர்ச்சையில் சிக்கியுள்ளார். ப்ருத்வி ஷா நண்பர்கள் அளித்த புகாரின் பெயரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் பிரபலமான உயர்ராக ஹோட்டல் அருகே அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ப்ருவி ஷாவிடம் ரசிகர்கள் சிலர் செஃல்பி எடுக்க அனுமதி கேட்டுள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த பகுதியிலுள்ள தெருவில் ப்ருவி ஷா பேஸ்பால் மட்டையை கையில் பிடித்தவாரு இருக்கும் விடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இதில் பெண் ஒருவர் மீது தாக்குதலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பிடித்துள்ளன. முன்னதாக ப்ருவி ஷாவிடம் செஃல்பி எடுத்த அனுமதி கேட்டு சில புகைப்படங்கள் எடுத்த பின்னர் அவர் கிளம்பியுள்ளார். ஆனால் விடாமல் தொடர்ந்து புகைப்படம் எடுக்க வற்புறுத்தியதால் கோபமான ப்ருத்வி ஷா நண்பர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்களை அழைத்து அவர்களை அப்புறப்படுத்து முயன்றுள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் ப்ருத்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் சென்ற காரை துரத்தி வந்த ரசிகர்கள், ஒஷிவாரா டிராபிக் சிக்னல் அருகே நின்றபோது காரின் விண்ட்ஷில்டை உடைத்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், பெண் ஒருவரை ப்ருத்வி ஷா தாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.