Spying Charge Against Indians: கத்தாரில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு-india shares big update on eight navy veterans on death in qatar - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Spying Charge Against Indians: கத்தாரில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு

Spying Charge Against Indians: கத்தாரில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு

Nov 09, 2023 11:36 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 09, 2023 11:36 PM IST

  • கத்தாரில் சிறையில் வைக்கப்பட்டுள்ள எட்டு கடற்படை வீரர்களை விடுவிக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று ஜெய்சங்கர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்த பின்னர் தெரிவித்தார். இதையடுத்து கடற்படை வீரர்களின் மரண்தண்டனைக்கு எதிராக இந்திய தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் எட்டு கடற்படை வீரர்களை தோகாவில் வைத்து சந்தித்த இந்தியா தூதரக அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட ரீதியான மற்றும் தூதரக ஆதரவை இந்தியா வழங்கும்" என்று கூறினார். இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இந்திய கப்பல்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகளுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய கப்பல் படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்ற தகவல் வெளியான நிலையில், அதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்ளும் வழிகளை இந்தியாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் ஆராயந்தனர். இதன் பின்னர் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடும் செய்துள்ளனர். இந்தியர்கள் உளவு பார்த்ததாக முன் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு இரு நாட்டின் உறவிலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

More