Gujarat Teacher Attacked: மாணவர்கள் நமாஸ் செய்த விவகாரம்! ஆசிரியரை தாக்கிய இந்துத்துவ கும்பல் - வைரல் விடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Gujarat Teacher Attacked: மாணவர்கள் நமாஸ் செய்த விவகாரம்! ஆசிரியரை தாக்கிய இந்துத்துவ கும்பல் - வைரல் விடியோ

Gujarat Teacher Attacked: மாணவர்கள் நமாஸ் செய்த விவகாரம்! ஆசிரியரை தாக்கிய இந்துத்துவ கும்பல் - வைரல் விடியோ

Oct 05, 2023 11:28 PM IST Muthu Vinayagam Kosalairaman
Oct 05, 2023 11:28 PM IST

  • குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள தனியார் பள்ளியை சேர்ந்த இசை ஆசிரியரை இந்துத்துவ கும்பல் தாக்கிய சம்பவத்துக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், இசை ஆசிரியரான மெளலிக் பதாக் என்பவரை பார்த்து மாணவர்கள் நமாஸ் செய்ததற்காக பள்ளி வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்த அகில் பாரதிய வித்யார்த்தி பரிசாத் என்ற இந்துத்துவ அமைப்பை சேர்ந்த நபர்கள், ஆசிரியர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆசிரியரை சுற்றி வளைத்து பலரும் தாக்கிய நிலையில், சக ஆசிரியர்கள் அவரை பத்திரமாக கும்பலிடமிருந்து மீட்டனர். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்து மாணவர்களை கட்டாயப்படுத்தி நமாஸ் செய்ய வைத்ததாக கூறி ஆசிரியர் மீது இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. ஒரு மாணவர் நமாஸ் செய்தபோது சக மாணவர்களும் அவருடன் இணைந்தாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தபோதும் அவர்கள் எவ்வித ஆட்சோபனையும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஆசிரியர் பாதாக்கை தாக்கியதற்கு அவர் இந்த நிகழ்வின் பின்னணியில் பியானோ இசைக்கருவி வாசித்ததன் காரணமாக இருக்கலாம். இந்த நிகழ்வில் யாரையும் இதை செய்ய வேண்டும் என கட்டாயபடுத்தவில்லை. அதே சமயம் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தவில்லை பெற்றோர் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் இங்கே வந்திருக்கலாம். எங்களது நோக்கமே மாணவர்களுக்கு பண்டிகைகள் பற்றி கற்பிப்பது மட்டுமே எனவும் பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த குஜராத் பள்ளிகல்விதுறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

More