தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cctv: 40க்கும் மேற்பட்டோர் பலியான கிரீஸ் ரயில் விபத்தின் சிசிடிவி காட்சி

CCTV: 40க்கும் மேற்பட்டோர் பலியான கிரீஸ் ரயில் விபத்தின் சிசிடிவி காட்சி

Mar 02, 2023 11:06 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 02, 2023 11:06 PM IST
  • Greece Train Accident: கீரிஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலியான கோர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கிரேக்க நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், இந்த பேரழிவுக்கு மனித தவறே காரணாக இருப்பது துர்தஷ்டவசமானது. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இரண்டு ரயில் ஒரே தண்டவாளத்தில் வந்ததுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். முன்னதாக சரக்கு ரயில் - பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கிய நிலையில், பயணிகள் ரயிலில் இருந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரழந்த நிலையில், பலரும் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு ரயில்கள் மோதிக்கொண்டதில் வெடிகுண்டு வெடித்தது போல் பலத்த சத்தம் கேட்டு தீப்பிடித்தது. பயணிகள் ரயிலில் மொத்தம் 350 பேர் வரை பயணித்த நிலையில், ஏராளமானோர் மாணவர்களாக இருந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் இரட்டை தண்டவாளங்கள் இருந்தபோதிலும் ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களும் வந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டது. விபத்துக்கு பின் உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், விபத்தில் உயிர் தப்பியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்துக்கு காரணமாக இருந்ததாக கூறப்பட்டு ரயில் விபத்து நிகழ்ந்து பகுதிக்கு முன்னதாக இருந்த ரயில் நிலையத்தின் நிலைய அலுவலர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் ஊழியர்கள் சங்கம் 24 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தையடுத்து மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
More