Tamil News  /  Video Gallery  /  Germany: Armed Man Breaks Airport Barrier, Drives Onto Tarmac With Child

Germany: விமான நிலையத்தில் காரில் குழந்தையுடன் கையில் துப்பாக்கி வைத்து கொண்டு தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு

Nov 05, 2023 11:48 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 05, 2023 11:48 PM IST
  • ஜெர்மனியில் உள்ள ஹேம்பர்க் விமான நிலையத்தில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் பாதுகாப்பு தடைகளை மீறி தார்சாலையில் காரை ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் ஒரு குழந்தை இருந்ததாகவும், அந்த நபரின் மனைவி தனது குழந்தையை காணவில்லை, அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ஹாம்பர்க மாநில போலீஸாருக்கு முன்பு தகவல் தெரிவித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் விமான சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. காரில் வந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதாகவும், காரிலிருந்து பாட்டில்களை வீசியதாகவும், காரில் 4 வயது குழந்தை ஆயுதம் வைத்திருந்த நபருடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு அங்கிருந்த விமானம் அருகே தனது காரை அவர் நிறுத்தியுள்ளார். குழந்தையை யார் பாரமிப்பது என்பது தொடர்பாக கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது
More