India Student Killed: அமெரிக்காவில் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!
- அமெரிக்காவின் ஒஹியோ மாகணத்தில் இந்தியாவை சேர்ந்த 26 வயது ஆராய்ச்சி மாணவர் காரில் வைத்து சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுடப்பட்ட மாணவர் பெயர் ஆதித்யா அட்லாகா என்பதும், அவர் சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் மாலிக்குலர் மற்றும் உயிரியல் பிரிவில் நான்காம் ஆண்டு முனைவர் பட்டம் பயிலும் மாணவராக இவர் இருந்து வருகிறார். இந்த மாணவர் உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாக பல்கலைகழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தில் சிக்கி தனது உயிரை இழந்துள்ளார் முன்னாள் ஏய்ம்ஸ் மாணவரான ஆதித்யா. கடந்த 9ஆம் தேதி மாணவர் ஆதித்யா தனது காரில் இறந்த நிலையில் காணப்பட்டார். அவரது கார் வெஸ்டர்ன் ஹில்ஸ் பகுதி அருகே சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு சென்று காரில் இருந்த மாணவர் ஆதித்யா மீட்கப்பட்டதாக சின்சினாட்டி போலீஸார் தெரிவித்துள்ளனர். மிகவும் மோசமான நிலையில் ஆதித்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனவும், இரண்டு நாள்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆதித்யா பயனித்த காரில் ட்ரைவர் சீட் அருக்க தோட்டாக்களால் தாக்கப்பட்ட மூன்று துளைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்திய குடிமகன் மீது தாக்குதல் நடைபெற்றிருப்பது இது முதல்முறையல்ல. நவம்பர் 20ஆம் தேதி இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 52 வயது பியூஷ் படேல், அக்டோபர் 29ஆம் தேதி 24 வயதான இந்திய மாணவர் வருண் ராஜ், ஏப்ரல் 21ஆம் தேதி 24 வயது இளைஞர் சாயிஷ் வீரா என இந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இந்தியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துள்ளனர்.