தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Ennore Protest : Fishermans Villages Have Been Continuously Protesting Against Coromandel Chemical Factory In Ennore

Ennore Protest : ‘40 நாட்களை கடந்த போராட்டம்.. 33 கிராமங்கள் சார்பில் கடையடைப்பு.. எண்ணூரில் பதட்டம்’

Feb 06, 2024 11:58 AM IST Stalin Navaneethakrishnan
Feb 06, 2024 11:58 AM IST
  • சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் அமைந்து உள்ளது கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் ரசாயன தொழிற்சாலை. வேளாண்மைக்குத் தேவையான ரசாயண உரத்தை உற்பத்தி செய்து வரும் இந்த நிறுவன ஆலையில் இருந்து கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றி வசித்து வந்த கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல், இருமல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. தொடர்ந்து தொழிற்சாலையை மூடக்கோரி 40 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மீனவ கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 33 மீனவ கிராமங்கள் சேர்ந்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
More