தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Crime: வத்தலக்குண்டில் தன்னை விட வயது மூத்த செவிலியருக்கு பாலியல் தொந்தரவு! அரசு மருத்துவர் கைது

Crime: வத்தலக்குண்டில் தன்னை விட வயது மூத்த செவிலியருக்கு பாலியல் தொந்தரவு! அரசு மருத்துவர் கைது

May 13, 2024 07:05 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 13, 2024 07:05 PM IST
  • திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர், ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில் இல்லம் தேடி மருத்துவம் பிரிவில், தன்னை விட மூன்று வயது மூத்த தற்காலிக பணியாற்றும் செவிலியருக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. தனது விருப்பத்துக்கு இணங்கா விட்டால் பணியில் இருந்து விலகி விடுவதாகவும் மருத்துவர் மிரட்டியுள்ளாராம். இதனால் மனமுடைந்த செவிலியர் தற்கொலைக்கு முயன்று உள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட செவலியர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட செவிலியர் அளித்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவர் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்ட வத்தலக்குண்டு போலீசார், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மருத்துவர் சீனிவாசனை கைது செய்தனர்.
More