Virudhungar: ‘டீசலுக்கு பதிலா மழை நீர்’ பட்டை நாமம் போட்ட பெட்ரோல் பங்க்.. நடுரோட்டில் நின்ற வாகனங்கள்!-distribution of rain water instead of diesel at a petrol station in cholapuram virudhunagar district - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Virudhungar: ‘டீசலுக்கு பதிலா மழை நீர்’ பட்டை நாமம் போட்ட பெட்ரோல் பங்க்.. நடுரோட்டில் நின்ற வாகனங்கள்!

Virudhungar: ‘டீசலுக்கு பதிலா மழை நீர்’ பட்டை நாமம் போட்ட பெட்ரோல் பங்க்.. நடுரோட்டில் நின்ற வாகனங்கள்!

Jan 28, 2024 11:18 AM IST Stalin Navaneethakrishnan
Jan 28, 2024 11:18 AM IST

  • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் உள்ள பெட்ரோங் பங்க்கில் கடந்த சில தினங்களாக பராமரிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், நேற்று முதல் எரிபொருள் விற்பனை தொடங்கி உள்ளது. நேற்று மாலை அங்கு பல வாகனங்கள் டீசல் நிரப்பிய நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்தில் அனைத்து வாகனங்கள் பழுதாகி நின்றன. டீசலை பரிசோதித்த போது, உள்ளே மழை நீர் இருந்தது தெரியவந்தது. உடனே பெட்ரோல் பங்க் வந்த வாகன ஓட்டிகள், அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பங்கின் உரிமம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், தற்போது வரை உரிமம் இன்றி செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்தது. பராமரிப்பு பணிக்காக வந்த மதுரையை சேர்ந்த ஊழியர்கள் பணியை முழுமையாக முடிக்காமல், விற்பனையை தொடங்க கூறியதால் மழைநீர் டீசல் தொட்டியில் கலந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் புகாரை பெற்றுக் கொண்ட தளவாய்புரம் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்காலிகமாக பெட்ரோல் பங்க் சேவை நிறுத்தப்பட்டுள்ளது

More