Indian Coastal Guard Daring Operation: கடலில் மூழ்கி கடத்தல் தங்கத்தை மீட்ட இந்திய கடற்படையினர் - விடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Indian Coastal Guard Daring Operation: கடலில் மூழ்கி கடத்தல் தங்கத்தை மீட்ட இந்திய கடற்படையினர் - விடியோ

Indian Coastal Guard Daring Operation: கடலில் மூழ்கி கடத்தல் தங்கத்தை மீட்ட இந்திய கடற்படையினர் - விடியோ

Jun 04, 2023 06:04 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 04, 2023 06:04 PM IST

  • இந்திய கடற்படை வீரர்கள், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் கல்டம்ஸ் அதிகாரிகள் இணைந்த் நடத்திய ஆபரேஷனில் கடத்தல் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 20 கோடி மதிப்பில் 32.689 கிலோ கடத்தல் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தலைமன்னார் பகுதியில் இரண்டு மீன்பிடி படகுகள் மூலம் கடலுக்கடியில் இந்த மீட்பு நடவடிக்கையானது மேற்்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்த கடல் வழியாக வெளிநாடுகளை சேர்ந்த தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள வேதாளை கடற்கரை பகுதி வழியே இந்த கடத்தல் நடைபெறும் என தெரியவந்த நிலையில், இந்திய கடற்படையுடன் இணைந்து தீவிர ரோந்து பணி நடத்தப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான மீனவ படகு ஒன்றை விரட்டி பிடித்தபோது தங்களகு படகில் இருந்த பார்சல் ஒன்றை அவர்கள் கடலில் தூக்கி வீசி தப்பித்துள்ளனர். பின்னர் அதை மீட்டபோது ரூ. 7.13 கோடி மதிப்பில் 11.6 கிலோ தங்கம் அதில் இருந்தது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மற்றொரு மீனவ படகு சந்தேகத்துக்கு இடமான நிலையில் இருந்த நிலையில் இந்திய கடற்படையினரின் கப்பலை பார்த்ததும் இருலில் தப்பித்து சென்றனர். அவர்களை இந்திய கடற்படையினர் துரத்தி பிடித்தனர். 

More