BJP Leader Murder: சிவகங்கை அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர்..! கட்சியினர், உறவினர்கள் சாலை மறியல்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Bjp Leader Murder: சிவகங்கை அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர்..! கட்சியினர், உறவினர்கள் சாலை மறியல்

BJP Leader Murder: சிவகங்கை அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர்..! கட்சியினர், உறவினர்கள் சாலை மறியல்

Published Jul 28, 2024 07:25 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jul 28, 2024 07:25 PM IST

  • சிவகங்கை அருகே வேளாங்குளத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரான செல்வக்குமார் (52), சாத்தரசன்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் அவரை வெட்டிவிட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து செல்வக்குமாரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே பாஜக மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் அக்கட்சியினர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் டிஎஸ்பி சிபிசாய் செளந்தர்யன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மாறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

More