Ayodhya Priest Murder: ராம் ஜென்மபூமி வளாகத்தில் பூசாரி கழுத்து அறுத்து கொலை - போலீஸ் விசாரணை
- உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியாவிலுள்ள ஹனுமன்கிராஹி கோயிலின் பூசாரி அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 44 வயதாகும் பூசாரியான ராம் சஹ்ரே தாஸ், ராம ஜென்மபூமி வளாகத்தின் சிசிடிவி கேமரா இருக்கும் உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். யாரோ தெரிந்தவர் தான் இந்த சம்பவத்தை செய்திருக்ககூடும் என கருதுவதாக உத்தரபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். பூசாரி இறந்த அறையில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி நீண்ட நாள்களாக பணி செய்யவில்லை என தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட இரவில் பூசாரிக்கும், சீடர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காலை பொழுதில் பூசாரி தனது அறையை விட்டு வெளியேறாமல் இருந்த நிலையில், கதவுகளும் நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளன. இதை கவனித்த சாதுக்கள் கதவி தள்ளி திறந்திருந்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.