தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  75th Independence Day: Isro First Virtual Space Park Introduced For People In India

75th Independence Day: இஸ்ரோவின் முதல் மெய்நிகர் பூங்கா!

Aug 12, 2022 05:37 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 12, 2022 05:37 PM IST
  • நாட்டின் 75வது சுதந்திர தினத்துக்கு இஸ்ரோ சார்பில் புதிய பரிசு ஒன்று தரப்பட்டுள்ளது. ஸ்பார்க் என்ற பெயரில் புதிய மெய் நிகர் அருங்காட்சியம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் முதல் 3D மெய்நிகர் விண்வெளி தொழில்நுட்ப பூங்காவாக உள்ளது. இந்த பூங்காவில் இஸ்ரோ சார்பில் நிகழ்த்தப்பட்ட மைல்கல் சாதனைகள், பணிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இடம்பிடித்துள்ளன. இங்கு வரும் பார்வையாளர்கள் இஸ்ரோவின் வெற்றிகரமான பயணத்துக்கு பங்களிப்பு அளித்த விஞ்ஞானிகளின் வரலாறுகளை தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமில்லாமல் இந்த ஸாபர்க் பார்க்கில் அருங்காட்சியகம், திரையரங்கம், கண்காணிப்பகம், தோட்டம், ராக்கெட்டுகள், காபிஷாப், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, சூர்ய குடும்பத்துக்கான பூங்கா உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன. மேற்கூறியவற்றின் அனைத்து அனுபவங்களையும் பெறுவதற்கு https://spacepark.isro.gov.in/introduction.html அல்லது இஸ்ரோ இணையத்தளத்துக்கு சென்று வலது இடது கார்னரில் இந்த அருங்காட்சியத்துக்கு உள்ளே நுழையும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதை மெளஸ் ஆரோக்களின் மூலம் நேவிகேட் செய்து உள்நுழைந்து வெளியேற வேண்டும். 360 டிகிரி அனுபவத்தை பெறுவதற்கு Zoom in, Zoom out ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். விர்ஷுவலாக உள்ளே நுழைபவர்கள் இந்த பார்க்கில் உள்ள திரையரங்கில் இஸ்ரோ மிஷன் குறித்த படங்களையும் பார்க்கலாம்.
More