தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Crime: தாயார் குறித்து தவறான பேச்சு! மதுரை அருகே சக மாணவனை கத்தியால் குத்தி கொன்ற சிறுவன் கைது

Crime: தாயார் குறித்து தவறான பேச்சு! மதுரை அருகே சக மாணவனை கத்தியால் குத்தி கொன்ற சிறுவன் கைது

May 25, 2024 07:20 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 25, 2024 07:20 PM IST
  • மதுரை மாவட்டம் மேலூர் அருகே கத்தப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் அரபி பள்ளியில் பிகார் மாநிலத்தை சேர்ந்த 13 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இதையடுத்து இங்கு படித்து வரும் இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 13 வயது மாணவன் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை வைத்து 9 வயதாகும் சக மாணவனை குத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் புகாரின் பேரில், கொலை குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனை கைது செய்துள்ளனர். முன்னதாக, சிறுவனை கொலை செய்த மாணவன், அருகில் இருந்த கழிவுநீர் தொட்டியில் உடலை வைத்து மறைத்துவிட்டு, எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளார். பின்னர் போலீசார் நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்தததை ஒப்புக்கொண்டார்.
More