வேலை உங்களை தேடி உங்கள் ஊருக்கு வருகிறது! ZOHO நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வேலை உங்களை தேடி உங்கள் ஊருக்கு வருகிறது! Zoho நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு

வேலை உங்களை தேடி உங்கள் ஊருக்கு வருகிறது! ZOHO நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு

Kathiravan V HT Tamil
Apr 03, 2023 08:17 PM IST

”தன்னிறைவு பெற்ற பொருளாதார ரீதியாக வளமான கிராமப்புற சமூகங்களை உருவாக்குவதே இதன் நோக்கம்” - ஸ்ரீதர் வேம்பு

zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை மற்றும் மக்களிடம் முதலீடு செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வந்த அந்நிறுவனம் கடந்த ஆறு மாதங்களில், திருப்பூர் மற்றும் திருச்சியில், இரண்டு 'ஹப்' அலுவலகங்களை திறந்துள்ளது.

Hub And Spoke முறையில் இந்தியாவில் சோஹோ நிறுவனம் அமைத்துள்ள அலுவலங்கள்
Hub And Spoke முறையில் இந்தியாவில் சோஹோ நிறுவனம் அமைத்துள்ள அலுவலங்கள்

மேலும் தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களிலும், உத்தர பிரதேச மாநிலத்திலும் ஒரு ’ஹப்’ மையத்தை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து Hub And Spoke முறையில் பரவலான பகுதிகளில் அலுவலகம் அமைத்து பணியாளர்களை எடுக்கு முறையை பின்பற்ற Zoho முடிவு செய்தது. இந்த அணுகுமுறை, இது ‘உள்நாட்டில் இருந்து உலகத்துடன் இணைப்பு’ என்ற 'Transnational localism'என்ற தத்துவத்தின் ஒரு பிரதிபலிப்பு ஆகும்.

’Hub’ எனப்படும் மைய அலுவலகங்கள் ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு இடமளிக்கக்கூடியவையாக உள்ளது; அதே சமயம் Spoke அலுவலகங்கள் 100 பணியாளர்களைக் கொண்ட சிறிய அலுவலகங்களாக உள்ளது. ஒவ்வொரு ’Hub’ அலுவலகமும் உள்கட்டமைப்பு ஆதரவு மற்றும் குழு ஒத்துழைப்புக்காக ’Spoke’ அலுவலகங்களை கொண்டு இயங்கும்.

சோஹோ நிறுவன மென்பொறியாளர்கள்
சோஹோ நிறுவன மென்பொறியாளர்கள்

இந்நிறுவனம் தற்போது சென்னை, தென்காசி மற்றும் ரேணிகுண்டா உள்ளிட்ட இடங்களில் ஐந்து ’Hub’ அலுவலகங்களையும், இந்தியாவில் சுமார் 30 ’Spoke’ அலுவலகங்களையும் கொண்டு உள்ளது.

கிராமங்கள் மற்றும் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள Zohoவின் அலுவலகங்களில் இருந்து கிட்டத்தட்ட 2000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் சுமார் ஆயிரம் ஊழியர்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

கிராமப்புற பகுதிகளுக்கு அதிகாரமளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, Spoke அலுவலகங்கள் அவ்வப்போது சுற்றுப்புற கல்லூரிகளில் இலவச தொழில் விழிப்புணர்வு அமர்வுகளை நடத்துகின்றன. அத்துடன் திறமையான உள்ளூர் இளைஞர்களைக் கண்டறிந்து பணியமர்த்துவதற்கான பயிற்சிப் பட்டறைகள் மற்றும் இன்குபேஷன் திட்டங்களை நடத்துகின்றன.

சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

”இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள சமூகங்களில் வளர்ச்சி மற்றும் வருவாயைப் பகிர்ந்தளிக்கும் யோசனையை ZOHO நிறுவனம் பிரதிபலிக்கிறது. இன்று எங்களின் பல தயாரிப்பு மேம்பாட்டுக் குழுக்கள், R&D குழுக்கள் இந்த அலுவலகங்களில் அமர்கின்றன. தன்னிறைவு பெற்ற பொருளாதார ரீதியாக வளமான கிராமப்புற சமூகங்களை உருவாக்குவதே இதன் நோக்கம்” என நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறி உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.