தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  What Are The Conditions For School And College Students To Join Government Hostels?

Govt Hostel : அரசு விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு என்ன நிபந்தனைகள்?

Priyadarshini R HT Tamil
Jun 03, 2023 11:02 AM IST

Govt Hostel : கோவையில் உள்ள அரசு விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதில், பள்ளி மாணவா்களுக்கு 7 விடுதிகளும், மாணவிகளுக்கு 6 விடுதிகளும், கல்லூரி மாணவா்களுக்கு 11 விடுதிகளும், மாணவிகளுக்கு 2 விடுதிகளும் உள்ளன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரலாம். அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் இலவச உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும்.

10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச் சீருடைகள் வழங்கப்படும். 10, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேர பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்குப் பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்களிடம் இருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொருத்தவரை ஜூன் 15ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொருத்தவரை ஜூலை 15ம் தேதிக்குள்ளும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்போது ஜாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கு என தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளைப் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்