தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: ’தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்ப நிலை’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Weather Update: ’தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்ப நிலை’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Jun 16, 2024 02:58 PM IST

Weather Update: இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Weather Update: ’தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்ப நிலை’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Weather Update: ’தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்ப நிலை’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை

16.06.2024 முதல் 18.06.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19.06.2024 முதல் 22.06.2024 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ட்ரெண்டிங் செய்திகள்

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

16.06.2024 முதல் 20.06.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய வேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 37.36 செல்சியஸை ஓட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27' 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்

16.06.2024 முதல் 20.06.2024 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

16.06.2024 தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

17.06.2024 தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.06.2024 முதல் 20.06.2024 வரை: தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள். ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

16.06.2024 முதல் 18.06.2024 வரை அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19.06.2024: அரபிக்கடலின் மத்திய பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 ஓலோ மீட்டர் வேசுந்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

WhatsApp channel

டாபிக்ஸ்