தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vijay: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

Vijay: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 26, 2024 12:00 PM IST

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கும் முடிவு காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

Vijay: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

விஜய் வாழ்த்து

இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘காங்கிரஸ் கட்சியினராலும், அதன் கூட்டணி கட்சியினராலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துகள்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று மக்களவை எதிர் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக  காங்கிரஸ் கட்சி தலைமை நேற்று அறிவித்தது. தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் நேற்று மாலை கூடினர். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ஒரு மனதாக செய்யப்பட்டார். 

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக தற்காலிக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் மற்ற நியமனங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நேரு குடும்பத்தை சேர்ந்த 3 ஆவது நபர்

 மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்கும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது நபர் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன்னர் சோனியா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்த பதவியை வகித்திருந்தனர் மற்றொருபுறம் 18 வது மக்களவைக் காண சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் ஓம்பிர்லா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டளளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெற்ற இந்திய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் மக்களவையில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன், ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சித் தலைவர் ஹமுனன் பெனிவால் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்திய அணியில் காங்கிரஸ் மிகப்பெரிய உறுப்பினராக உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் அவர்கள் 99 இடங்களை வென்றனர், அதில் ராகுல் காந்தி முக்கிய பங்கு வகித்தார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று சிவசேனா (யுபிடி) தலைவர் ஆனந்த் துபே கூறினார்.

வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி எழுதிய உணர்ச்சிகரமான கடிதம்: 'நான் துன்புறுத்தப்பட்டபோது...'

ராகுல் காந்தி ஐந்து முறை எம்.பி.யாக இருந்துள்ளார், தற்போது மக்களவையில் ரேபரேலி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அரசியலமைப்பின் நகலை கையில் வைத்துக் கொண்டு அவர் செவ்வாய்க்கிழமை எம்.பி.யாக பதவியேற்றார். தனிப்பெரும் எதிர்க்கட்சியான காங்கிரஸ், 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களில் பதவியைப் பெறுவதற்கு மக்களவையில் தேவையான 10 சதவீத உறுப்பினர்களைப் பெறத் தவறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9