தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Velankanni Festival, Tnstc Announce Special Buses For Devotees

Velankanni Festival: வேளாங்கண்ணி ஆலய திருவிழா- 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Karthikeyan S HT Tamil
Aug 25, 2022 08:19 PM IST

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாத ஆலய திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக போக்குவரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் ஆக.25-ம் தேதி முதல் செப்.11-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு , தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து இயக்கப்படவுள்ளன.

மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஆக மொத்தம் 750 சிறப்பு பேருந்துகள் ஆக.25 முதல் செப்.11-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இது தவிர குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது." என்று அதில் கூறப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்