வேலம்மாள் பாட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் வீடு ஒதுக்கீடு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வேலம்மாள் பாட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் வீடு ஒதுக்கீடு

வேலம்மாள் பாட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் வீடு ஒதுக்கீடு

I Jayachandran HT Tamil
Aug 23, 2022 10:06 PM IST

முதல்வரைக் கவர்ந்த வேலம்மாள் பாட்டிக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

<p>வேலம்மாள் பாட்டி</p>
<p>வேலம்மாள் பாட்டி</p>

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற சில நாட்களில் அரசின் விளம்பரங்களில் பொக்கை வாய் சிரிப்புடன் போஸ் கொடுத்தவர் 80 வயது வேலம்மாள் பாட்டி. கொரோனா நிவாரண நிதியாக அரசு வழங்கிய நான்கு ஐநுாறு ரூபாய் நோட்டுகளுடன் சிரித்த படி இவர் கொடுத்த போஸ், முதல்வரை கவர்ந்தது.

இது போன்ற ஏழைத் தாய்மார்களின் சிரிப்புதான் தமது அரசின் சிறப்பு என்று முதல்வர் டுவிட் செய்தார். இதை தொடர்ந்து வேலம்மாள் பாட்டிக்கு முதியோருக்கான ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கப்பட்டது. நாகர்கோவிலில் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வீடு இல்லாததால் திண்ணைகளில் துாங்குவதாக கூறினார். அதற்கு வீடு தருவதாக முதல்வர் உறுதியளித்தாராம்.

இது குறித்து வேலம்மாள் பாட்டி கூறியது: முதல்வரை சந்தித்த போது சாப்பிட்டீங்களா , ஆயிரம் ரூபாய் கிடைத்ததா என்று கேட்டார். நானும் கிடைத்தது என்று சொன்னேன். ஐயா எனக்கு வீடு இல்லை, ஒரு வீடு வேணும்னு கேட்டேன். அவரும் தருகிறேன் என்று சொன்னார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்றார்.இவரது வீட்டின் அருகே புளியடியில் அரசு கட்டிய தொகுப்பு வீடுகள் உள்ளது. அரசு இதில் ஒரு வீட்டை அவருக்கு வழங்கலாம். ஆனால் நடவடிக்கை இல்லை. இது குறித்து செய்தி வெளியாகியது.

இந்நிலையில், வேலம்மாள் பாட்டியின் கோரிக்கை குறித்து குறித்த செய்தி அறிந்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு வீடு ஒதுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, நேற்று இரவு அதிகாரிகள், வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வீடு ஒதுக்கப்பட்டதற்கான உத்தரவு நகலை அவரிடம் அதிகாரிகள் வழங்கி உள்ளனர். 

இந்த வீடு, தற்போது அவர் வசிக்கும் இடத்தில் இருந்து 30 கி.மீ., தொலைவில், திருநெல்வேலி மாவட்ட எல்லையில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குடிசை மாற்று வாரியத்துக்கு பயனர்கள் வழங்க வேண்டிய ரூ.76 ஆயிரம் நிதியையும், பாட்டியால் வழங்க முடியாது என்பதால், அந்த தொகையையும் திமுக நிர்வாகி ஒருவர் செலுத்த முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.